இப்ராகிமோவிக்  ஓய்வை  அறிவிப்பு

266
Zlatan Ibrahimovic

34 வயதான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ஜிலேடன் இப்ராகிமோவிக் 115 போட்டிகளில் 62 கோல்கள் அடித்துள்ளார்.

யூரோ கால்பந்து கிண்ணத்தில்  குழு பிரிவில் விளையாடி வரும் அவர், இதுவரை அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இந்த இரண்டு போட்டிகளில் இப்ராகிமோவிக் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவைப் பதம் பார்த்தது வேல்ஸ்

இந்நிலையில், இப்ராகிமோவிக், யூரோ கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், யூரோவில் நடைபெற்று வரும் போட்டிகள் தான் ஸ்வீடன் நாட்டிற்கான எனது கடைசிப் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் நான் விளையாட மாட்டேன். ஸ்வீடன் அணியின் கேப்டனாக இருந்ததில் பெருமை கொள்கிறேன்.

எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எங்கெல்லாம் நான் செல்கிறேனோ அங்கு ஸ்வீடன் கொடியை உடன் கொண்டு செல்வேன். அதில் பெருமை கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்