ஐந்து ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி

447
Zimbabwe vs Bangladesh

பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜிம்பாப்வே அணி 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

ஐந்து  ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஹராரேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது தொடக்கம் ஜிம்பாப்வே அணி 11 போட்டிகளில் தோற்று ஒரு போட்டியை சமன் செய்திருந்தது.

ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த பங்களாதேஷ்

இம்ருல் கைஸ் மற்றும் சௌம்யா சர்கார் ஆகியோரது அபார சதத்தின் மூலம்..

இந்நிலையில் பங்களாதேஷின் சில்ஹட்டில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 321 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியின் நான்காவது நாளான இன்று (06) வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது.   

கன்னிப் போட்டியில் ஆடிய சுழற்பந்து வீச்சாளர் பிரென்டன் மவுடா ஜிம்பாப்வே சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சிகந்தர் ராசா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். பங்களாதேஷ் அணியின் இம்ருல் கைஸ் பெற்ற 43 ஓட்டங்களுமே அதிகமாகும்.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 282 ஓட்டங்களை பெற்றது. எனினும் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தபோதும் பங்களாதேஷுக்கு சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க முடிந்தது.  

அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே..

பங்களாதேஷ் அணி இதற்கு முன் கடைசியாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்றது 2001 ஆம் ஆண்டாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (11) டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே (முதல் இன்னிங்ஸ்) – 282 (117.3) – சீன் வில்லியம்ஸ் 88, பீட்டர் மூர் 63*, டைஜுல் இஸ்லாம் 6/118

பங்களாதேஷ் (முதல் இன்னிங்ஸ்) – 143 (51) – அஷ்ரபுல் ஹக் 41*, டன்டாய் சட்டரா 3/19

ஜிம்பாப்வே (இரண்டாவது இன்னிங்ஸ்) 181 (65.4) – ஹமில்டன் மசகட்சா 48, டய்ஜுல் இஸ்லாம் 5/62, மஹதி ஹசன் மிர்ஸா 3/48

பங்களாதேஷ் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 169 (63.1) –  இம்ருல் கைஸ் 43, பிரென்டன் மவுடா 4/21

முடிவு: ஜிம்பாப்வே 151 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<