இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த மாதம் மோதவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான போட்டி அட்டவணையில் இலங்கை கிரிக்கெட் சபை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையின் திகதிகளில் மாற்றங்கள் ஏற்படாத போதும், போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
IPL ஏலத்தில் இடம்பெறவுள்ள 8 இலங்கை வீரர்கள்
ஆரம்பத்தில் ஒருநாள் போட்டிகள் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், T20i போட்டிகள் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் 19 வயதின் கீழ் உலகக்கிண்ணம் நடைபெறவிருந்த காரணத்தால் மேற்குறித்த இரண்டு மைதானங்களிலும் போட்டிகள் நடத்தப்படவிருந்தன. எனினும் இலங்கையிலிருந்து 19 வயதின் கீழ் உலகக்கிண்ணம் மாற்றப்பட்டதை தொடர்ந்து, இலங்கை – ஜிம்பாப்வே தொடர் முழுமையாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணி எதிர்வரும் 3ம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், முதல் ஒருநாள் போட்டி 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
ஒருநாள் தொடர்
- முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 6 – ஆர்.பிரேமதாஸ
- 2வது ஒருநாள் போட்டி – ஜனவரி 8 – ஆர்.பிரேமதாஸ
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 11 – ஆர்.பிரேமதாஸ
T20i தொடர்
- முதல் T20i – ஜனவரி 14 – ஆர்.பிரேமதாஸ
- 2வது T20i – ஜனவரி 16 – ஆர்.பிரேமதாஸ
- 3வது T20i – ஜனவரி 18 – ஆர்.பிரேமதாஸ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<