இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் கிரைக் எர்வின், லுக் ஜொங்வே மற்றும் கிளைவ் மடாண்டே ஆகியோரின் அதிரடியான ஆட்டத்துடன் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. ஜிம்பாப்வே அணி மாற்றங்களின்றி களமிறங்க, இலங்கை அணி நுவான் துஷாரவுக்கு பதிலாக டில்சான் மதுசங்கவை களமிறக்கியிருந்தது.
>>செபஸ்டியனைட்ஸ் கழகத்தை வீழ்த்தி சம்பியனானது SSC
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு ஆரம்பத்தை பொருத்தவரை ரிச்சர்ட் கிராவா மற்றும் பிளெசிங் முஷரபாணி ஆகியோர் நேர்த்தியான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர்.
இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டுமொருமுறை நெருக்கடிக்கு முகங்கொடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேற, சதீர சமரவிக்ரம 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் ஓட்டங்களை கட்டியெழுப்ப தொடங்கினர். மெதிவ்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் சரித் அசலங்க கிடைத்த வாய்ப்புகளில் ஓரிரு பௌண்டரிகளை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார்.
முதல் 12 ஓவர்களில் 64 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை அணி பெற்றிருந்தாலும் அதனை தொடர்ந்து சரித் அசலங்க வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச்சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய மெதிவ்ஸும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க தொடங்கினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 118 ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்காக அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை (T20I) பதிவுசெய்தனர். சரித் அசலங்க 39 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் மெதிவ்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், தசுன் ஷானக 4 பந்துகளில் 9 ஓட்டங்களையும் பெற இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் முஷரபாணி மற்றும் லுக் ஜொங்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிரந்தனர்.
சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணியின் முதல் விக்கெட் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதும் கிரைக் எர்வின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இளம் வீரர் பிரைன் பென்னெட் மிகச்சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை வழங்க ஜிம்பாப்வே அணி வேகமாக ஓட்டங்களை குவித்தது. இரண்டாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களை இவர்கள் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர்.
>>WATCH – இலங்கை கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ள மர்பின் அபினாஷ்! | Sports Field
எனினும் மஹீஷ் தீக்ஷன சீன் வில்லியம்ஸ் மற்றும் பென்னெட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி பக்கம் போட்டியை திருப்பினார். இதனைத்தொடர்ந்து ஹஸரங்க கிரைக் எர்வினையும் (70) சிக்கண்டர் ரஷா மற்றும் ரயன் பேர்ல் ஆகியோரை சமீரவும் ஆட்டமிழக்கச்செய்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
எவ்வாறாயினும் வனிந்து ஹஸரங்க ஓட்டங்களை (41) விட்டுக்கொடுத்தார். மறுமுனையில் டில்சான் மதுசங்க 19வது ஓவரை வீசி இறுதி ஓவருக்கு 20 என்ற வெற்றியிலக்கை வைத்திருந்த போதும், அஞ்செலோ மெதிவ்ஸின் 5 பந்துகளில் இந்த வெற்றியிலக்கை ஜிம்பாப்வே அணி அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றியை தமதாக்கியது.
இதில் லுக் ஜொங்வே 25 ஓட்டங்களையும், கிளைவ் மடாண்டே 15 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்ததுடன், 19.5 ஓவர்களில் வெற்றியை பெற்று தொட 1-1 என ஜிம்பாப்வே அணி சமப்படுத்தியது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி வியாழக்கிழமை (18) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Luke Jongwe b Blessing Muzarabani | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Kusal Mendis | c Ryan Burl b Luke Jongwe | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Kusal Perera | c Ryan Burl b Blessing Muzarabani | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c Clive Madande b Wellington Masakadza | 16 | 12 | 2 | 0 | 133.33 |
Charith Asalanka | c Sean Williams b Luke Jongwe | 69 | 39 | 5 | 3 | 176.92 |
Angelo Mathews | not out | 66 | 51 | 0 | 6 | 129.41 |
Dasun Shanaka | c Ryan Burl b Richard Ngarava | 9 | 4 | 0 | 2 | 225.00 |
Wanidu Hasaranga | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0) |
Total | 173/6 (20 Overs, RR: 8.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Richard Ngarava | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
Blessing Muzarabani | 4 | 0 | 36 | 2 | 9.00 | |
Luke Jongwe | 2 | 0 | 32 | 2 | 16.00 | |
Wellington Masakadza | 3 | 0 | 25 | 1 | 8.33 | |
Sikandar Raza | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Sean Williams | 3 | 0 | 24 | 0 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tinashe Kamunhukamwe | c Wanidu Hasaranga b Dilshan Madushanka | 12 | 13 | 1 | 0 | 92.31 |
Craig Ervine | c Maheesh Theekshana b Wanidu Hasaranga | 70 | 54 | 6 | 2 | 129.63 |
Brian Bennett | b Maheesh Theekshana | 25 | 20 | 3 | 0 | 125.00 |
Sikandar Raza | c Sadeera Samarawickrama b Dushmantha Chameera | 8 | 5 | 2 | 0 | 160.00 |
Sean Williams | b Maheesh Theekshana | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Ryan Burl | c Kusal Mendis b Dushmantha Chameera | 13 | 9 | 1 | 1 | 144.44 |
Luke Jongwe | not out | 25 | 12 | 2 | 2 | 208.33 |
Clive Madande | not out | 15 | 5 | 0 | 2 | 300.00 |
Extras | 9 (b 0 , lb 2 , nb 2, w 5, pen 0) |
Total | 178/6 (19.5 Overs, RR: 8.97) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Maheesh Theekshana | 4 | 0 | 25 | 2 | 6.25 | |
Dushmantha Chameera | 4 | 0 | 30 | 2 | 7.50 | |
Charith Asalanka | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 41 | 1 | 10.25 | |
Angelo Mathews | 1.5 | 0 | 35 | 0 | 23.33 | |
Dasun Shanaka | 1 | 0 | 13 | 0 | 13.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<