சுற்றுலா ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
>>மழையினால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி
இரண்டு அணிகளும் மாற்றங்கள் இன்றி களமிறங்க முதல் ஓவரில் விக்கெட்டினை வீழ்த்தி டில்சான் மதுசங்க சிறந்த ஆரம்பம் ஒன்றை அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.
அதன்பின்னர் ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரைக் எரிவினின் நிதானமான ஆட்டத்துடன் அந்த அணி முன்னேறத் தொடங்கியது. குறிப்பாக ஜாய்லார்ட் கும்பி மற்றும் மில்டன் ஷும்பா ஆகியோருடன் கிரைக் எர்வின் முறையே 60 மற்றும் 63 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தை பகிர்ந்தார்.
இந்த இணைப்பாட்டங்களுடன் சிறந்த முறையில் ஓட்டங்களை குவித்த போதும், மஹீஷ் தீக்ஷன ஜாய்லார்ட் கும்பி மற்றும் மில்டன் ஷும்பா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை மீண்டும் போட்டிக்கு அழைத்து வந்தார்.
இதற்கிடையில் அரைச்சதம் கடந்திருந்த கிரைக் எர்வின் இலங்கை அணிக்கு சவால் கொடுத்தார். எனினும் துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமவின் அபார பிடியெடுப்பில் 82 ஓட்டங்களுடன் எர்வின் ஆட்டமிழந்தார்.
கிரைக் எர்வினின் ஆட்டமிழப்பின் போது ஜிம்பாப்வே அணி 182 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்க 44.4 ஓவர்கள் நிறைவில் ஜிம்பாப்வே அணி 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்டுகளை வீழ்த்த, துஷ்மந்த சமீர மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
>>SAT20 தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நுவான் துஷார!
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ பிரகாசிக்க தவறி ஏமாற்றமளித்தார். இவர் முதல் போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்ததுடன், இந்தப் போட்டியில் 4 ஓட்டங்களுடன் முதலாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சதீர சமரவிக்ரம வந்த வேகத்தில் 4 ஓட்டங்களுடன் வெளியேற, குசல் மெண்டிஸ் மற்றும் ஜனித் லியனகே இணைப்பாட்டம் ஒன்றை பெறத்தொடங்கினர். இவர்களின் இணைப்பாட்டத்துடன் 49 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
இதனைத்தொடர்ந்து போட்டி ஆரம்பிக்க இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது. மெண்டிஸ் 17 ஓட்டங்களுடனும், முதல் போட்டியில் சதமடித்த சரித் அசலங்க ஓட்டங்களின்றியும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்கப்பட்ட நிலையில் சஹான் ஆராச்சிகே மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் 37 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்து சற்று அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தனர். எனினும் சஹான் ஆராச்சிகே 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சஹான் ஆராச்சிகேவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஜனித் லியனகே அரைச்சதம் கடந்தாலும் மறுமுனையில் அனுபவ வீரர் தசுன் ஷானக ஆட்டமிழக்க, இலங்கை அணி மேலும் பின்னடைவை சந்திதது. ஜனித் லியனகே மற்றும் மஹீஷ் தீக்ஷன மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பிய போதும், இடைக்கிடையில் மழைக்குறுக்கிட்டுவந்ததால் டக்வர்த் லூவிஸ் வெற்றியிலக்கை நோக்கி ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
>>இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்
இந்த அழுத்தத்தில் மஹீஷ் தீக்ஷன ஆட்டமிழக்க, அணியின் வெற்றிக்காக சதத்தை நெருங்கிய போதும் டக்வர்த் லூவிஸ் வெற்றியிலக்கை அடைய பௌண்டரி ஒன்றை விளாச முனைந்து ஜனித் லியனகே 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு 2 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 36 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
இதன்போது 9வது விக்கெட்டுக்காக இணைந்த துஷ்மந்த சமீர(18) மற்றும் ஜெப்ரி வெண்டர்சே (19) ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட 49 ஓவர்கள் நிறைவில் 211 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றிபெற்றது. ஜிம்பாப்வே அணியை பொருத்தவரை ரிச்சர்ட் கிராவா அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Joylord Gumbie | b Maheesh Theekshana | 30 | 37 | 4 | 0 | 81.08 |
Tinashe Kamunhukamwe | c Kusal Mendis b Dilshan Madushanka | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Craig Ervine | c Sadeera Samarawickrama b Dushmantha Chameera | 82 | 102 | 9 | 1 | 80.39 |
Milton Shumba | c Sahan Arachchige b Maheesh Theekshana | 26 | 45 | 2 | 0 | 57.78 |
Sikandar Raza | c Janith Liyanage b Jeffery Vandersay | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Ryan Burl | b Dushmantha Chameera | 31 | 37 | 1 | 1 | 83.78 |
Clive Madande | lbw b Jeffery Vandersay | 14 | 21 | 2 | 0 | 66.67 |
Faraz Akram | lbw b Maheesh Theekshana | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Richard Ngarava | not out | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Blessing Muzarabani | run out (Kusal Mendis) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Tapiwa Mufudza | b Maheesh Theekshana | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Extras | 17 (b 1 , lb 8 , nb 1, w 7, pen 0) |
Total | 208/10 (44.4 Overs, RR: 4.66) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 7 | 1 | 24 | 1 | 3.43 | |
Dushmantha Chameera | 8 | 0 | 44 | 2 | 5.50 | |
Maheesh Theekshana | 9.4 | 1 | 31 | 4 | 3.30 | |
Janith Liyanage | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Dasun Shanaka | 4 | 0 | 14 | 0 | 3.50 | |
Sahan Arachchige | 2 | 0 | 10 | 0 | 5.00 | |
Jeffery Vandersay | 10 | 1 | 47 | 2 | 4.70 | |
Charith Asalanka | 2 | 0 | 18 | 0 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c Joylord Gumbie b Richard Ngarava | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Kusal Mendis | c Ryan Burl b Richard Ngarava | 17 | 28 | 2 | 0 | 60.71 |
Sadeera Samarawickrama | c Craig Ervine b Richard Ngarava | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Janith Liyanage | c Richard Ngarava b Blessing Muzarabani | 95 | 127 | 6 | 2 | 74.80 |
Charith Asalanka | c Joylord Gumbie b Richard Ngarava | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Sahan Arachchige | lbw b Sikandar Raza | 21 | 39 | 2 | 0 | 53.85 |
Dasun Shanaka | c Joylord Gumbie b Sikandar Raza | 7 | 13 | 0 | 0 | 53.85 |
Maheesh Theekshana | c Faraz Akram b Richard Ngarava | 18 | 31 | 1 | 0 | 58.06 |
Dushmantha Chameera | not out | 18 | 25 | 2 | 0 | 72.00 |
Jeffery Vandersay | not out | 19 | 18 | 2 | 0 | 105.56 |
Extras | 8 (b 0 , lb 2 , nb 2, w 4, pen 0) |
Total | 211/8 (49 Overs, RR: 4.31) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Richard Ngarava | 10 | 3 | 32 | 5 | 3.20 | |
Blessing Muzarabani | 10 | 0 | 41 | 1 | 4.10 | |
Faraz Akram | 10 | 0 | 43 | 0 | 4.30 | |
Sikandar Raza | 10 | 1 | 32 | 2 | 3.20 | |
Tapiwa Mufudza | 7 | 0 | 38 | 0 | 5.43 | |
Ryan Burl | 2 | 0 | 23 | 0 | 11.50 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<