இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுகொள்வது எப்படி?

Zimbabwe tour of Sri Lanka 2022

1133
Zimbabwe tour of Sri Lanka 2022

கண்டி – பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்ற அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சுப்பர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk  மற்றும் www.bookmyshow.com என்ற இணையத்தளங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

>> இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

அதேநேரம், டிக்கெட்டுக்ளை நேரடியாக சென்றும் ரசிகர்கள் நாளை(13) முதல் பெற்றுக்கொளள் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பலகொல்ல – அபிதா மைதானத்தில் போட்டி தினத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், போட்டி இல்லாத நாட்களில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இணையத்தளம் மூலமாக டிக்கெட்டுகளை கொள்வனவு செய்த ரசிகர்கள் மேற்குறித்த டிக்கெட் விற்பனை நிலையங்களில் தங்களுடைய டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள் காலை 09 மணி முதல் மாலை 5 மணிவரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் 300 ரூபா முதல் ஆரம்பமாகவுள்ளதுடன் 1000 மற்றும் 3000 ரூபாவுக்கான டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். கொவிட்-19 தொற்று காரணமாக மைதானதத்தில் 50 சதவீதமான ரசிகர்கள் மாத்திரதே உள்வாங்கப்படுவர் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். இதில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், குறைந்தது இரண்டாவது தடுப்பூசியை பெற்று 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்கள் மைதானத்துக்கு வரும் போது,கொவிட்-19 தடுப்பூசி அட்டை, அல்லது டிஜிட்டல் அட்டையை வைத்திருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16, 18 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<