Home Tamil பெதும், சந்திமால், அசலங்கவின் அபாரத்துடன் இலங்கைக்கு இலகு வெற்றி

பெதும், சந்திமால், அசலங்கவின் அபாரத்துடன் இலங்கைக்கு இலகு வெற்றி

Zimbabwe tour of Sri Lanka 2022

5999

கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த நிலையில், மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்து, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>> இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் அறிவிப்பு

இலங்கை பதினொருவர்

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வெண்டர்சே, சாமிக்க குணசேகர, நுவான் பிரதீப், மஹீஷ் தீக்ஷன

ஜிம்பாப்வே பதினொருவர்

கிரைக் எர்வின் (தலைவர்),  பர்ல் ரயன், சகப்வா  ரெஜிஸ், டெண்டாய் சதாரா, கைடானோ டகுட்ஸ்வானாஷே, மெதெவர் வெஸ்லி, வெலிங்டன் மஷகட்ஷா, சிகண்டர்  ரஷா, ஷோன் வில்லியம்ஸ், என்கிரவா ரிச்சட், பிளெசிஸ் முஷரபாணி

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவிக்க ஜிம்பாப்வே அணி தொடங்கியதுடன், இலங்கை அணிக்காக தன்னுடைய கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் சாமிக்க குணசேகர ஒரு ஓவரை வீசிய நிலையில், உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்தார். இவர் இன்னிங்ஸின் நிறைவுவரை மீண்டும் பந்துவீசுவதற்கு மைதானத்துக்குள் வரவில்லை.

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் தன்னுடைய அறிமுக போட்டியில் விளையாடிய கைடானோ டகுட்ஸ்வானாஷே மற்றும் ரெஜிஸ் சகப்வா ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 80 ஓட்டங்களை பகிர்ந்தனர். குறித்த இந்த சிறந்த இணைப்பாட்டத்தை தன்னுடைய முதல் ஓவரிலேயே ஜெப்ரி வெண்டர்சே தகர்த்திருந்தார்.

அறிமுக வீரர் கைடானோ டகுட்ஸ்வானாஷே 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அணித்தலைவர் கிரைக் எர்வின் கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் 9 ஓட்டங்களுடன் போவ்ல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஷோன் வில்லியம்ஸ் மற்றும் ரெஜிஸ் சகப்வா ஆகியோர் நிதானமான இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை பகிர, ஜெப்ரி வெண்டர்சே சகப்வாவின் (72) விக்கெட்டினை கைப்பற்றினார்.

தொடர்ந்து சீன் வில்லியம்ஸ் தனியாளாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த ஆரம்பித்ததுடன், வெஸ்லி மெதவேருடன் 42 ஓட்டங்களையும், சிக்கண்டர் ரஷாவுடன் 46 ஓட்டங்களை பகிர்ந்தார். நுவான் பிரதீப் அணியின் 46வது ஓவரை வீசியதுடன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜிம்பாப்வே அணியின் ஓட்ட வேகம் குறைவடைந்தது.

ஆனாலும் தன்னுடைய 5வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த ஷோன் வில்லியம்ஸ் இறுதி ஓவர்வரை துடுப்பெடுத்தாடியிருந்ததுடன், 100 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி,  பெதும்  நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் மிகச்சிறப்பான துடுப்பாட்ட பங்களிப்புகளுடன் 48.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். பெதும் நிஸ்ஸங்க நிதானமாக ஆட, குசல் மெண்டிஸ் மீள்வருகையை அபாரமான பௌண்டரிகளுடன் ஆரம்பித்திருந்தார்.

துரதிஷ்டவசமாக குசல் மெண்டிஸ் 24 பந்துகளில் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 40 ஓட்டங்களுக்கு தங்களுடைய முதலாவது  விக்கெட்டை இழந்தது. குசல் மெண்டிஸிற்கு பதிலாக கமிந்து மெண்டிஸ் களமிறங்கி 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், பெதும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல ஆரம்பித்தனர். தனது ஓட்டவேகத்தை அதிகரித்த பெதும் நிஸ்ஸங்க கன்னி ஒருநாள் அரைச்சதத்தை பதிவுசெய்து ஓட்டங்களை குவித்தார். இதில், 71 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்று பெதும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்க, இலங்கை அணி மூன்றாவது விக்கெட்டை 147 ஓட்டங்களுக்கு இழந்தது.

இருப்பினும் இதனையடுத்து களமிறங்கிய சரித் அசலங்க, தினேஷ் சந்திமாலுடன் இணைந்து அணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை பகிர்ந்ததுடன், இருவரும் தங்களுடைய அரைச்சதங்களையும் பதிவுசெய்தனர். தினேஷ் சந்திமால் தன்னுடைய 24வது அரைச்சதத்தையும், சரித் அசலங்க தன்னுடைய 4வது அரைச்சதத்தையும் பதிவுசெய்தனர்.

குறிப்பாக நான்காவது விக்கெட்டுக்காக இவர்கள் 129 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இலங்கை அணியின் வெற்றியிலக்கை இலகுவாக்க, தினேஷ் சந்திமால் 75 ஓட்டங்களை பெற்ற நிலையில், இறுதிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து சரித் அசலங்க 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த போதும், அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ரிச்சட் கராவா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியதுடன், இலங்கை அணியானது 48.3 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை உறுதிசெய்திருந்தது. எனவே, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Zimbabwe
296/9 (50)

Sri Lanka
300/5 (48.3)

Batsmen R B 4s 6s SR
Takudzwanashe Kaitano lbw b Jeffery Vandersay 42 49 7 0 85.71
Regis Chakabva c Kusal Mendis b Jeffery Vandersay 72 82 6 1 87.80
Craig Ervine b Kamindu Mendis 9 20 0 0 45.00
Sean Williams b Chamika Karunaratne 100 87 9 2 114.94
Wesly Madhevere b Chamika Karunaratne 20 25 1 0 80.00
Sikandar Raza lbw b Nuwan Pradeep 18 17 2 0 105.88
Ryan Burl c Dasun Shanaka b Nuwan Pradeep 4 4 1 0 100.00
Wellington Masakadza run out (Chamika Karunaratne) 6 7 1 0 85.71
Blessing Muzarabani Chamika Gunasekara b 3 6 0 0 50.00
Tendai Chatara not out 1 2 0 0 50.00
Richard Ngarava not out 10 2 1 1 500.00


Extras 11 (b 0 , lb 2 , nb 1, w 8, pen 0)
Total 296/9 (50 Overs, RR: 5.92)
Fall of Wickets 1-80 (14.4) Takudzwanashe Kaitano, 2-110 (19.6) Craig Ervine, 3-160 (29.1) Regis Chakabva, 4-202 (37.5) Wesly Madhevere, 5-248 (44.1) Sikandar Raza, 6-252 (44.5) Ryan Burl, 7-269 (47.2) Wellington Masakadza, 8-286 (49.4) Sean Williams, 9-286 (49.4) Blessing Muzarabani,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 10 1 54 2 5.40
Chamika Gunasekara 1 0 8 0 8.00
Maheesh Theekshana 10 0 40 0 4.00
Dasun Shanaka 4 0 34 0 8.50
Chamika Karunaratne 10 1 69 3 6.90
Jeffery Vandersay 6 0 44 2 7.33
Kamindu Mendis 6 0 32 1 5.33
Charith Asalanka 3 0 13 0 4.33


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Regis Chakabva b Sikandar Raza 75 71 10 0 105.63
Kusal Mendis c Regis Chakabva b Blessing Muzarabani 26 24 6 0 108.33
Kamindu Mendis b Richard Ngarava 17 24 1 1 70.83
Dinesh Chandimal c Craig Ervine b Richard Ngarava 75 91 4 1 82.42
Charith Asalanka lbw b Richard Ngarava 71 68 6 2 104.41
Dasun Shanaka not out 10 12 1 0 83.33
Chamika Karunaratne not out 5 2 1 0 250.00


Extras 21 (b 4 , lb 2 , nb 1, w 14, pen 0)
Total 300/5 (48.3 Overs, RR: 6.19)
Fall of Wickets 1-40 (6.4) Kusal Mendis, 2-81 (13.6) Kamindu Mendis, 3-147 (24.4) Pathum Nissanka, 4-276 (45.5) Dinesh Chandimal, 5-292 (47.6) Charith Asalanka,

Bowling O M R W Econ
Blessing Muzarabani 9.3 0 58 1 6.24
Tendai Chatara 9 0 56 0 6.22
Richard Ngarava 9 0 56 2 6.22
Wellington Masakadza 6 0 29 0 4.83
Ryan Burl 1 0 12 0 12.00
Sean Williams 8 0 43 0 5.38
Sikandar Raza 4 0 23 1 5.75
Wesly Madhevere 2 0 17 0 8.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<