ஜிம்பாப்வேவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான T20i தொடரானது டிசம்பர் 9ஆம் திகதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளும் முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் திகதியும், புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது ஜனவரி 2ஆம் திகதியும் குயின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- லங்கா T10 சுபர் லீக் வீரர்கள் நிரல்படுத்தல் நவம்பரில்
- மே.தீவுகள் குழாத்தில் இணையும் ஷிம்ரொன் ஹெட்மையர்
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய மெதிவ் வேட்
இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியது. இதைத்தொடர்ந்து 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதிய நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அதேசமயம் ஒருநாள் தொடரை பொருத்தவரையில் இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிய நிலையில், அதில் 18 முறை ஆப்கானிஸ்தான் அணியும், 10 முறை ஜிம்பாப்வே அணியம் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளுக்கும் இடையேயான T20i தொடரை பொறுத்தவரையில் 15 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியானது 14 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் தொடர் அட்டவணை
முதல் T20i போட்டி – டிசம்பர் 9
2ஆவது T20i போட்டி- டிசம்பர் 11
3ஆவது T2oi போட்டி – டிசம்பர் 12
முதல் ஒருநாள் போட்டி – டிசம்பர் 15
2ஆவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17
3ஆவது ஒருநாள் போட்டி – டிசம்பர் 19
முதல் டெஸ்ட் – 26-30 டிசம்பர்
இரண்டாவது டெஸ்ட் – 2-6 ஜனவரி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<