பங்களாதேஷ் – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

173
Cric Tracker

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் (பெப்ரவரி) பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய எதிர்கால தொடர் அட்டவணையில் குறித்த பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடர் மார்ச் மாதத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என்றவாறு உள்ளடக்கப்பட்டிருந்தது. 

ராகுல் – ஐயர் ஜோடியின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் அடுத்த வெற்றியை சுவைத்த இந்தியா

நியூசிலாந்து அணியுடனான……………..

இந்நிலையில் குறித்த தொடரை ஏற்பாடு செய்து நடாத்தும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது வித்தியாசமாக டி20 சர்வதேச தொடரினுடைய போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து மூவகையான தொடர்களையும் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி குறித்த தொடருக்கான போட்டி அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (26) வெளியிட்டுள்ளது. 

அதன் பிரகாரம் இரு அணிகளுக்கும் இடையில் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் தொடராக அடுத்த மாதம் 22 ஆம் திகதி ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகின்றது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷை வந்தடையவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

பெப்ரவரி 15 ஆம் திகதி பங்களாதேஷை வந்தடையும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது வரும் 18,19 ஆம் திகதிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட டெஸ்ட் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

பென் ஸ்டோக்கிற்கு அபராதம் விதித்த ஐ.சி.சி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்……………….

ஜிம்பாப்வே அணி இறுதியாக கடந்த வருடம் (2019) பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்து முக்கோண டி20 சர்வதேச தொடரில் விளையாடியிருந்தது. மேலும் 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் அட்டவணை

  • 22 – 26 பெப்ரவரி – ஒற்றை டெஸ்ட் போட்டி – மிர்பூர்
  • 1 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சட்டகோரம் (பகலிரவு)
  • 3 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சட்டகோரம் (பகலிரவு)
  • 6 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சட்டகோரம் (பகலிரவு)
  • 9 மார்ச் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – மிர்பூர் (இரவு)
  • 11 மார்ச் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – மிர்பூர் (இரவு)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<