இலங்கை அணி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஜிம்பாப்வே அணி நம்பத் தயாராக இல்லை என்று அந்த அணியின் தலைவர் கிரேம் கிரீமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் போட்டிகள், குறிப்பாக சர்வதேசப் போட்டித் தொடர்களில் அணியின் ஆட்ட முறை குறித்து அண்மைய வாரங்களில் பலவகையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தன.
பிரமோத்யவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை வீரர்கள் கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் அணித் தேர்வாளருமான பிரமோத்ய…
கடந்த ஜுன், ஜூலை மாதங்களில் ஜிம்பாப்வேயுடன் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை 2-3 என தோற்றமை குறித்து கருத்துகள் வெளியாகி வருகின்றபோதும், அவை தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை எந்த ஒரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் வைத்து கருத்து வெளியிட்ட கிரீமர், இலங்கை அணி வீரர்கள் அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள் என்று தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தமது நாட்டையும் கிரிக்கெட்டையும் அதிகம் விரும்புகின்றனர் என்றும் கிரீமர் கூறினார்.
இலங்கை அணியினர் மீதான இந்த குற்றச்சாட்டு தமது அணி பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடுவதாக இருப்பதாகவும் ஜிம்பாப்வே அணித்தலைவர் மேலும் குறிப்பிடுகிறார்.
“ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு குறித்து நான் அதிகம் கூற விரும்பவில்லை. எமது அணியினர் சிறப்பாக ஆடினார்கள். அந்த பெருமையை யாராலும் பறித்துவிட முடியாது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நான் நம்பவில்லை” என்று சுழற்பந்து வீச்சாளரான கிரீமர் கூறினார்.
இலங்கை சுற்றுப் பயணத்தில் ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை போராடி வென்றபோதும் அந்த அணியால் இலங்கைக்கு எதிரான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனது.
குறிப்பாக, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 2-2 என்று சமநிலையானபோது ஹம்பாந்தோட்டையில் நடந்த ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெல்ல முடிந்தது.
இலங்கைக்கு ஒழுங்கற்ற மைதானம் வழங்கப்பட்ட விடயம் குறித்து விசாரணை
அண்மைய இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரின் போது இலங்கை…
இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலரும் காயத்திற்கு உள்ளான நிலையிலேயே இலங்கை வந்த ஜிம்பாப்வே அணி, இலங்கையின் ஆடுகளத்திற்கு பொருத்தமாக பல சுழற்பந்து வீச்சாளர்களையும் களமிறக்கியது. அதேபோன்று ஜிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு சிறப்பாக துப்பெடுத்தாடினர்.
எனினும், ஜிம்பாப்வேயுடனான போட்டித் தொடருக்கு பின்னர் எழுந்த ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலும் விசாரணைகளை அரம்பித்துள்ளது.
அதேவேளை, இலங்கை அணியின் ஒப்பந்த வீரர்களும் தம்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி இலங்கை கிரிக்கெட் சபைக்கு மனுவொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.
அவதூறு கொண்ட கொடூரமான குற்றச்சாட்டால் தமது நற்பெயர்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க உடன் விசாரணை நடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி இருந்துடன், தம் மீது விதிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆதரத்துடன் நிரூபிக்கும்படியும் சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க