2015ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக சர்வான்

499
Zarwan

முதலாவது ஜனாதிபதி விளையாட்டு விருதுகள் விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் 2015ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது முன்னால் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் தலைவர் சர்வான் ஜோஹரிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சாஹிராக் கல்லூரி வீரரான சர்வான் தற்போது கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்திற்கு விளையாடி வருகிறார். இலங்கையில் உள்ள சிறந்த கால்பந்தாட்ட வீரராக வளர்ந்து வரும் இவர் உலகப் புகழ்பெற்ற மென்செஸ்டர் யுனைடெட் நடாத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டதோடு இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் தலைவராக 2013-14 ஆண்டுகளில் செயற்பட்டு இருந்தார்.

சர்வான் ஆரம்பத்தில் தனது சொந்த ஊரின் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாடி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு இறுதயில் அவர் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தில் இணைந்தார் என்பது ஒரு குறிப்படத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்