20 வயதின்கீழ் பாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் வெற்றியாளர்களாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி

FFSL U20 Schools Football Championship 2024/25

79
Football Championshi

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் (FFSL) நடைபெற்று முடிந்திருக்கும் 20 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளுக்கான கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.  

நேற்று (27) கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் தொடரின் நடப்புச் சம்பியன்களான ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியினை கொழும்பு ஸாஹிரா கல்லூரி எதிர் கொண்டது. 

>>நடப்புச் சம்பியன் அலிகார், கொழும்பு ஸாஹிரா இறுதிப் போட்டிக்குத் தெரிவு<<

தீர்மானம் கொண்ட இறுதிப் போட்டி ஆரம்பித்து முதல் நிமிடங்களிலேயே ஸாஹிரா அணிக்காக ஆகீல் அமானுல்லா (எட்டாவது நிமிடத்தில்) முதல் கோலினைப் பெற்றார். இதன் பின்னர் போட்டியின் முதல் பாதி மேலதிக கோல்கள் எதனையும் இரண்டு அணிகளும் பெறாத நிலையில் முடிவுக்கு வந்தது. 

பின்னர் போட்டியின் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்காது போக, ஆட்டத்தில் 1-0 என ஸாஹிரா கல்லூரி வெற்றியினை பதிவு செய்து தொடரில் நடப்புச் சம்பியன்களை வீழ்த்தியது.   

முழு நேரம்: கொழும்பு ஸாஹிரா 1-0 ஏறாவூர் அலிகார் 

 

கோல்கள் 

 

ஆகீல் அமானுல்லா – 8’ 

மூன்றாவது இடத்திற்கான போட்டி  

தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியானது, கொழும்பின் மற்றொரு பாடசாலையான ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியினை எதிர் கொண்டது. கொழும்பு சிட்டி லீக் கால்பந்து அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி 1-1 என சமநிலை அடைய, பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் புனித ஜோசப் கல்லூரி அணியானது வெற்றி பெற்று தொடரில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது.  

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<