பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கடந்த பருவகால போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, டிவிஷன் I இற்கு தரமுயர்ந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி, இந்த பருவகால போட்டிகளுக்கு அதிகமான இளம் வீரர்களை உள்வாங்கியுள்ள அணியாக இருக்கின்றது. அவ்வணி தொடர்ந்தும் டிவிஷன் I இல் நீடித்திருப்பதற்கு இந்த பருவகால போட்டிகளில் கடுமையாக போராட வேண்டிய கட்டாய நிலைமையில் உள்ளது.
ஸாஹிரா கல்லூரி அணி பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்
1892ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட தனியார் முஸ்லிம் பாடசாலையாகும். இன்று 4900க்கும் அதிகமான மாணவர்களையும் 250 ஆசிரியர்களையும் கொண்ட பிரமாண்டமான முஸ்லீம் கல்வி நிறுவனமாக இது மாற்றம் பெற்றிருக்கிறது.
1960ஆம் ஆண்டுகளில், இலங்கை அணியை (முன்னர் சிலோன் என அழைக்கப்பட்டது) பிரதிநிதித்துவப்படுத்திய குலான் ராசிக் மற்றும் எம் தேவராஜன் போன்ற சிறந்த வீரர்கள் ஸாஹிரா கல்லூரியிலேயே உருப்பெற்றனர்.
2003ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக டிவிஷன் 3 இற்கு தரமிறக்கப்பட்ட ஸாஹிரா கல்லூரி அணி, சில வருடங்களாக கீழ் மட்ட லீக் போட்டிகளில் பங்குபற்றி வந்தது. எனினும், சிறந்த பெறுபேறுகளை வெளிபடுத்திய அக்கல்லூரி அணி மீண்டும் இழந்த அதே முதல் டிவிஷனுக்கு உயர்வு பெற்றது.
அதன் பின்னர் இறுதியாக நடைபெற்ற 2015/16 பருவகால போட்டிகளில் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டு லீக் சுற்றுப்போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்று, கால் இறுதிக்கு முன்னைய சுற்று வரை வந்தது.
2016/ 17 பருவகாலப் போட்டிகள்
இந்த பருவகாலத்தில் ஸாஹிரா கல்லூரி அணி C பிரிவில் அங்கம் வகிக்கின்றது. டிவிசன் I போட்டிகளில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு இத்தொடரில் சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த அணி வீரர்கள் எதிர்பார்த்திருகிறார்கள்.
2016/17கான பருவகால போட்டிகளில், பண்டாரநாயக்க கல்லூரியுடனான முதல் போட்டியில், ஸாஹிரா கல்லூரி தோல்வியுடன் இந்த பருவகால பொட்டிj் தொடரை ஆரம்பித்தது.
அத்துடன், தர்மசோக்க கல்லூரியுடனான போட்டியிலும் ஏற்பட்ட முதல் இன்னிங்ஸ் தோல்வியால், இளம் வீரர்களை அதிகம் கொண்ட ஸாஹிரா கல்லூரி அணி ஆரம்ப போட்டிகளின் இருந்தே சிக்களுக்குள்ளானது.
ஸாஹிரா கல்லூரியின் முக்கிய வீரர்கள்
அணி தோல்வியுற்ற நிலையிலும் அதிரடியாக ஆடி சதம் விளாசிய சஜித் சமீர, ஸாஹிரா கல்லூரி தொடர்ந்தும் டிவிசன் I போட்டிகளில் நீடித்திருப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வீரராக உள்ளார்.
2015/16 பருவகால போட்டிகளில் சஜித் 800 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, 40 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
அணித்தலைவர் இஷான் சம்சுதீன் மிகவும் போட்டித்தன்மை மிக்க இந்த டிவிஷன் I சுற்றுப்போட்டிகளில் இளம் ஸாஹிரா கல்லூரி அணியை வழி நடத்துகிறார். வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், தனது சுழல் பந்து வீச்சால் அணிக்கு பாரிய உதவிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பயிற்சியாளர்கள்
இசிபதன கல்லூரியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிஷாந்த இம்முறை ஸாஹிரா அணிக்கு பயிற்சி வழங்குகின்றார். அணியின் முன்னேற்றத்திற்காக இவருக்கு இம்முறை பாரிய பொறுப்புகள் உள்ளன. அவரது உதவி பயிற்சியாளர் ஷமீர் அஹமதிற்கும் இந்த இளம் ஸாஹிரா கல்லூரி அணி வீரர்களை வெற்றி பாதைக்கு திருப்பும் முக்கிய பொறுப்பு உள்ளது.
M.R.D ஹமீன் ஸாஹிரா கல்லூரி அணியின் மேற்பார்வையாளராக இருக்கிறார்.
புகைப்பட தொகுப்பு : ஸாஹிரா கல்லூரி கிரிக்கெட் அணி
Photo Album: Zahira College Cricket Team Preview 2016/17
இறுதியாக,
ஸாஹிரா கல்லூரி அணிக்குள் 15 வயதுக்குட்பட்ட மிக இளமையான நான்கு வீரர்கள் இருப்பதனால், டிவிஷன் I போட்டிகளில் நீடிதிருப்பதற்கு கடுமையாக தம்மை அர்ப்பனித்து விளையாட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், சஜித் சமீர மற்றும் அணித்தலைவர் இஷாம் சம்சுதீன் ஆகியோர் மிக சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஸாஹிரா கல்லூரி அணிக்கு டிவிசன் I இல் நீடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எனினும், இப்போட்டிகளில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள், எதிர்வரும் வருடங்களில் இந்த இளம் அணிக்கு வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்களை வழங்கும் என்பதே அவ்வணிக்கு உள்ள முக்கிய பயன்களில் ஒன்றாக உள்ளது.