சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இலங்கை – இங்கிலாந்து, பங்களாதேஷ் – ஜிம்பாப்வே மற்றும் இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடர்களின் நிறைவுக்கு பின்னர், ஐசிசி புதிய ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
T20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நேற்று (29) வெளியிட்டுள்ள சர்வதேச T20 போட்டிகளுக்கான
இதில், இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் பிரகாசித்திருந்த இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்ல, அகில தனன்ஜய மற்றும் இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் ஆகியோர் உயர் முன்னேற்றங்களை கண்டுள்ளனர்.
இலங்கை அணியை பொருத்தவரையில், தொடர்ந்து பந்து வீச்சில் பிரகாசித்து வரும் அகில தன்னஜய இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் அவர் 651 என்ற வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் பந்துவீச்சு தரவரிசையில் 21வது இடத்திலிருந்து 13வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து நிரோஷன் டிக்வெல்ல 2 அரைச்சதங்கள் அடங்கலாக 192 ஓட்டங்களை குவித்து, 621 புள்ளிகளுடன் (அதியுயர் புள்ளிகள்) 27வது இடத்தை பிடித்துள்ளார்.
அகில தனன்ஜய மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர், ஒருநாள் தரவரிசையின், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு வரிசைகளில் இலங்கை சார்பில் அதிகூடிய நிலைகளை பிடித்துள்ளவர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இதனிடையே, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 195 என்ற சராசரியில் 195 ஓட்டங்களை விளாசிய இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் 19வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளை, சகலதுறை வீரர்கள் பட்டியலில் திசர பெரேரா 28வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னரும், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுடன், சிக்கர் தவான் 4 இடங்கள் பின்னடைவை சந்தித்து, 9வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட வீரர்களை பொருத்தவரை சாய் ஹோப் 25வது இடத்துக்கும், ஷிம்ரொன் ஹெட்மையர் 26வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்கு பலம் சேர்த்த சரித் அசலங்க
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்
பந்துவீச்சு வரிசையில், இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், யுஸ்வேந்திர சஹால் முதற்தடவையாக, முதல் 10 வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளார். இவர் 3 இடங்கள் முன்னேற்றத்துடன், 8வது இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகளின் தொடர் நிறைவில்,சௌமிய சர்க்கார் மற்றும் இம்ரூல் கைஸ் ஆகியோர் முறையே 51 மற்றும் 56வது இடங்கைளை பிடித்துள்ளதுடன், மெஹிடி ஹாசன் மிராஷ் பந்துவீச்சு வரிசையில் 45வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய அணி தரவரிசையின் படி, இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே இந்தியா, நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன. ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணி தொடர்ந்தும் 8வது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.