கடந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் தற்போது தன்னை அதிலிருந்து விடுவிக்கக் கோரி பிசிசிஐ க்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பஞ்சாப் வீரர்களான சுப்மன் கில், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்துவந்த யுவ்ராஜ் சிங், தற்போது பஞ்சாப் அணிக்காக T20 போட்டிகளில் விளையாடுவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஷ் T20i தொடரில் விளையாடும் யுவராஜ் சிங்?
இந்திய அணியின் தலைசிறந்த சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரராகத் திகழ்ந்தவர் யுவ்ராஜ் சிங். களத்தடுப்பு, துடுப்பாட்டம், பந்துவீச்சு என மூன்று துறைகளிலும் அவர் அசத்தியவர்.
கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணி T20i உலகக் கிண்ணத்தையும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தையும் இந்தியா கைப்பற்ற முக்கிய வீரராக திகழ்ந்தார்.
அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் அபுதாபியில் நடைபெற்ற T10I லீக் மற்றும் கனடாவில் நடைபெற்ற குளொபல் T20i தொடர்களில் விளையாடினார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலாளர் புனீத் பாலியினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை யுவராஜ் சிங் தற்போது உறுதி செய்துள்ளார்.
Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131
இதுகுறித்து யுவராஜ் சிங் க்ரிக்பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கையில்,
நான் இளம் வீரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விடயங்களை அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டேன். துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ஓட்டங்களைக் குவித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
ஆரம்பத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பிசிசிஐ அனுமதி கொடுத்தால், வெளிநாட்டு லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
ரோயல் செலன்ஞர்ஸ் அணியுடன் இணைந்த இசுரு உதான
பஞ்சாப் அணி சம்பியன் பட்டத்தை வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அந்த அணிக்காக விளையாடி நானும், ஹர்பஜன் சிங்கும் முக்கிய தொடர்களை வென்று கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பஞ்சாப் அணியின் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், அல்மோல்பிரீத் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு யுவராஜ் சிங் பயிற்சி அளித்துள்ளார்.
இதையடுத்து தன்னுடைய துடுப்பாட்ட திறமை இன்னும் குறையவில்லை என்பதையும் தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று யுவராஜ் சிங் விளையாடுவார் என்றும் அதற்கான அணியை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை உதவி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
எதுஎவ்வாறாயினும், பிசிசிஐயிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தாலும் தான் T20i போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடுவேன் என்று யுவராஜ் சிங் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<