காற்றின் வேகத்தினால் இலங்கை சாதனையை தவறவிட்டார் யுபுன்

278
Yupun Abeykoon facebook

ஜேர்மனியின் டெஸாவு நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.09 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கையின் மின்னல் வேக வீரராக முத்திரை பதித்தார். 

எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட 2.2 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரம் தேசிய சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை.

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளின் படி, குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் வீரரொருவர் போட்டியை நிறைவு செய்த பிறகு காற்றின் திசைகாட்டி இரண்டை விட குறைவாக இருக்க வேண்டும்

தேசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன்

அதற்கு மேலதிகமாக இருந்தால் வெற்றி மாத்திரமே வழங்கப்படும் தவிர, அந்த காலப்பெறுமதி ஒருபோதும் போட்டிச் சாதனையாக கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.

இதன்படி, யுபுன் அபேகோனின் காலப்பெறுமதி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிசிறந்த தூரமாக மாத்திரம் கவனத்தில் கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதன்மூலம் தெற்காசியாவில் மிகவும் குறுகிய நேரத்திற்குள் 100 மீட்டர் ஓட்டப் போட்டியினை நிறைவு செய்த வீரராக தனது சொந்த சாதனையை முறியடித்து யுபுன் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

முன்னதாக, இத்தாலியில் கடந்த வாரம் நடைபெற்ற மீட்டிங் டி சவோனா 2021 மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றிய யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.15 செக்கன்களில் நிறைவுசெய்து தனது சொந்த தெற்காசிய மற்றும் தேசிய சாதனைகளை முறியடித்திருந்தார்.  

திடீர் உபாதையினால் ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிடும் டில்ஷி

எனவே, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் (10.05 செக்.) ஓட்டப் போட்டிக்கான அடைவுமட்டத்தினை யுபுன் அபேகோன் பூர்த்தி செய்வார் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியை 10.25 செக்கன்களில் நிறைவுசெய்த நெதர்லதந்தைச் சேர்ந்த வான் கூல் ஜொரிஸ் இரண்டாமிடத்தையும், 10.31 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த ஜேர்மனியின் வோல்ப் யனிக் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…