இளம் விளையாட்டு வீரர் ஒருவரின் ஆகாரத்தில் மிகவும் முக்கியமான அங்கம், அவர் உள்ளெடுக்கும் திரவ ஆகாரமே அன்றி, அவர் உண்ணும் உணவு அல்ல என்பது ஆச்சரியமான ஆனால் மறுக்க முடியாத உண்மை.
முன் இளம் பருவ விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் நீர்மத் தேவைகளுக்கு ஏற்றவாறு, விளையாட்டுக்களில் ஈடுபடும் முன்னரும் பின்னரும் தண்ணீர் அல்லது விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க பானங்களை அருந்துதல் முக்கியமானதாகும்.
பெற்றோர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் என்ற வகையில் சிறுவர்களை வெப்பத் தாக்கு (Heat stroke) போன்ற வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அத்தியவசியம்.
தண்ணீரின் மிக முக்கிய செயல்பாடுகளில் ஒன்று உடலை குளிர்மைப்படுத்துவதாகும். சிறுவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கும் போதும் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும் தசைகளில் இருந்து வெளியேறும் வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரிக்கின்றது. இதனை சமநிலைப்படுத்தும் பொருட்டு உடலிலுள்ள நீர், வியர்வையாக வெளியேறி உடலை குளிர்மைப்படுத்துகிறது. உடலிலிருந்து வெளியேறும் நீரை ஈடுசெய்வதற்காக தண்ணீர் போன்ற பானங்களை பருகுவது அவசியம். அவ்வாறு போதியளவு திரவங்களை உள்ளெடுக்காத போதே உடல் சூடேற்றம் அடைகிறது.
உடல் வறட்சியடைந்து, நீரிழப்பிற்கு உட்படுவதை தவிர்க்க விளையாட்டுகளில் ஈடுபடும் போதும், ஈடுபடும் முன்னரும், பின்னரும் பரிந்துரைக்கப்பட்ட அளவு பானங்களை அருந்துதல் வேண்டும். தண்ணீருடன் ஒப்பிடுகையில் உப்புக்கள் கலந்த பானங்கள் (விளையாட்டு ஊக்கப் பானங்கள்) சிறுவர்களால் விரும்பி உட்கொள்ளப்படுவதுடன், அவை நீரிழப்பை தடுப்பதில் அதிக ஆற்றலுடையதாகவும் காணப்படுகின்றன.
பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு பானங்களை பருகுதல் பொருத்தமானதாகும்.
6 முதல் 12 வயது வரையான சிறுவர்கள் |
13 முதல் 18 வயது வரையான சிறுவர்கள் |
விளையாட்டில் ஈடுபட முன்னர்
விளையாட்டில் ஈடுபட முன்னர் பானங்களை அருந்துதல், நீரிழப்பை தடுக்க அல்லது குறைக்க வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 1 அல்லது 2 மணித்தியாலங்களுக்கு முன்: 120ml – 240ml குளிர்ந்த நீர் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்: 120ml – 240ml குளிர்ந்த நீர் |
விளையாட்டில் ஈடுபட முன்னர்
விளையாட்டில் ஈடுபட முன்னர் பானங்களை அருந்துதல், நீரிழப்பை தடுக்க அல்லது குறைக்க வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 1 அல்லது 2 மணித்தியாலங்களுக்கு முன்: 240ml – 480ml குளிர்ந்த நீர் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்: 240ml – 360ml குளிர்ந்த நீர் |
விளையாட்டில் ஈடுபடும் போது
20 நிமிடங்களுக்கு ஒருமுறை: உடல் நிறைக்கேற்ற வகையில் 150ml – 270ml வரை குளிர்ந்த நீர் அல்லது விளையாட்டு ஊக்க பானம் (40kg நிறையுள்ள ஒருவருக்கு 150ml, 60kg நிறையுள்ள ஒருவர்க்கு 270ml) |
விளையாட்டில் ஈடுபடும் போது
20 நிமிடங்களுக்கு ஒருமுறை: உடல் நிறைக்கேற்ற வகையில் 150ml – 300ml குளிர்ந்த நீர் அல்லது விளையாட்டு ஊக்க பானம் |
விளையாட்டில் ஈடுபட்ட பின்னர்
விளையாட்டின் போது இழக்கப்பட்ட நீரை ஈடுசெய்யும் வகையில் தண்ணீர் அல்லது ஊக்க பானமொன்றை விளையாடியதன் பின்னர் அருந்துதல் வேண்டும். 2 மணித்தியாலத்திற்குள்: இழக்கப்பட்ட ஒவ்வொரு 1kg எடைக்கும் 1350ml வீதம் அருந்துதல் பொருத்தமானது. |
விளையாட்டில் ஈடுபட்ட பின்னர்
விளையாட்டின் போது இழக்கப்பட்ட நீரை ஈடுசெய்யும் வகையில் தண்ணீர் அல்லது ஊக்க பானமொன்றை விளையாடியதன் பின்னர் அருந்துதல் வேண்டும். 2 மணித்தியாலத்திற்குள்: இழக்கப்பட்ட ஒவ்வொரு 1kg எடைக்கும் 1350ml வீதம் அருந்துதல் பொருத்தமானது. |