இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி 

இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய, பங்களாதேஷ் அணிகள்

784
ACC

இந்த ஆண்டுக்கான (2019) 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான (இளையோர்) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் மழையின் காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருக்கின்றன. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் தோல்வி

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், இன்று (10) பங்களாதேஷ்….

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் எட்டு நாடுகளின் இளம் கிரிக்கெட் அணிகள் சம்பியன் பட்டம் வெல்லும் கனவுகளுடன் A,B என இரண்டு குழுக்களில் போட்டியிட்டிருந்தன. 

இந்த தொடரின் முதற்சுற்று போட்டிகள் யாவும், கொழும்பின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்ற நிலையில் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு குழு A இல் இருந்து நடப்புச் சம்பியன் இந்தியா, ஆப்கானிஸ்தான் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளும், குழு B இல் இருந்து பங்களாதேஷ், இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளும் தெரிவாகின. 

இதனை அடுத்து இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (12) கொழும்பில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், பி. சரவணமுத்து சர்வதேச மைதானத்தில் இடம்பெறவிருந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை, இந்தியா இளம்வீரர்கள் தங்களுக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவிருந்ததோடு, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொரட்டுவ மைதானத்தில் வைத்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இளம் அணிகள் விளையாடவிருந்தன. 

எனினும், மழையினால் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளின் போது தத்தமது குழுக்களில் முதலிடங்கள் பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன. 

CPL தொடரில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் டிக்வெல்ல, திசர?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை….CRICKET

அந்த வகையில் குழு A இல் முதலிடம் பெற்ற இந்திய இளம் கிரிக்கெட் அணியும், குழு B இல் முதலிடம் பெற்ற பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.  

இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய காரணத்தினால் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் இளம் அணிகளுக்கு அரையிறுதிப் போட்டியில் ஆடாமலே இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேற நேரிட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளும் இறுதிப் போட்டியில் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன் பட்டத்தினை வெல்லும் நோக்குடன் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (14) மோதவுள்ளன.   

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க