Home Tamil இளையோர் ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடிய இந்திய அணி

இளையோர் ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடிய இந்திய அணி

788

த்ரில்லாக நடைபெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. 

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, 7 ஆவது தடவையாக இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி

இந்த ஆண்டுக்கான (2019) 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான (இளையோர்) ஆசியக் …

எட்டு நாடுகளின் இளையோர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் இளையோர் ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் யாவும் கடந்த வியாழக்கிழமை (12) மழையினால் கைவிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தத்தமது குழுக்களில் புள்ளிகளின் அடிப்படையில் முதலிடம் பெற்ற இந்திய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியும், பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. 

தொடர்ந்து கொழும்பு ஆர். பிரேதாச மைதானத்தில் இன்று (14) இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய தரப்பின் தலைவர் த்ருவ் ஜூரேல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார். அதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய இளம் வீரர்கள் பங்களாதேஷின் பந்துவீச்சுக்கு தடுமாற்றம் காண்பித்து 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 

இந்திய இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கரன் லால் 37 ஓட்டங்களை குவிக்க, அதன் தலைவர் த்ருவ் ஜூரேல் போராட்டம் காட்டி 33 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், இந்திய இளம் அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். 

Photos: India vs Bangladesh | Finals | U19 Asia Cup 2019

இதேவேளை, பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சமிம் ஹொசைன் மற்றும் ம்ருத்தோன்ஜோய் சௌத்ரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 107 ஓட்டங்களை பதிலுக்கு அடைய பங்களாதேஷ் தரப்பு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. 

பங்களாதேஷ் இளம் அணி தமது வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டி ஒரு கட்டத்தில் 78 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது. எனினும், ம்ருத்தோன்ஜோய் சௌத்ரி தனது தரப்பிற்காக போராட்டம் காட்டியிருந்தார். எனினும், அவரின் விக்கெட் பறிபோக கடைசியில் பங்களாதேஷ் இளம் தரப்பு 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வி அடைந்தது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் …

பங்களாதேஷ் இளம் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் அக்பர் அலி 23 ஓட்டங்களை குவிக்க, ம்ருத்தோன்ஜோய் சௌத்ரி 21 ஓட்டங்களை எடுத்திருந்தார். ஏனைய பங்களாதேஷ் அணியின் வீரர்கள் மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்திருந்தனர்.  

இதேநேரம், இந்திய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு அதர்வா அன்கலோக்கர் தனது சுழல் மூலம் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்ததோடு, ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுக்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய இளம் அணியின் அதர்வா அன்கலோக்கர் தெரிவாக தொடர் நாயகன் விருது இந்திய தரப்பின் ஏனைய இளம் வீரரான அர்ஜூன் அஸாட்டிற்கு வழங்கப்பட்டது. 

ஸ்கோர் விபரம்

Result


India U19
106/10 (32.4)

Bangladesh U19
101/10 (33)

Batsmen R B 4s 6s SR
Suved Parkar run out (Shamim Hossain) 4 14 0 0 28.57
Arjun Azad c Akbar Ali b Tanzid Hasan 0 2 0 0 0.00
Thakur Tilak Varma c Akbar Ali b Mirttunjoy Chowdhury 2 5 0 0 40.00
Dhruv Chand Jurel c Mirttunjoy Chowdhury b Shamim Hossain 33 57 2 1 57.89
Shashwat Rawat lbw b Shamim Hossain 19 25 2 0 76.00
Varun Lavande c Mirttunjoy Chowdhury b Shamim Hossain 0 2 0 0 0.00
Atharva Ankolekar run out (Mahmudul Hasan) 2 16 0 0 12.50
Karan Lal c Mahmudul Hasan b Mirttunjoy Chowdhury 37 43 3 1 86.05
Sushant Mishra c Akbar Ali b Mohammad Shahin 3 16 0 0 18.75
Vidyadhar Patil c Akbar Ali b Mirttunjoy Chowdhury 0 1 0 0 0.00
Akash Singh not out 2 15 0 0 13.33


Extras 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 106/10 (32.4 Overs, RR: 3.24)
Fall of Wickets 1-3 (2.2) Arjun Azad, 2-6 (3.2) Thakur Tilak Varma, 3-8 (5.1) Suved Parkar, 4-53 (14.2) Shashwat Rawat, 5-53 (14.4) Varun Lavande, 6-61 (19.2) Atharva Ankolekar, 7-62 (20.1) Dhruv Chand Jurel, 8-82 (25.4) Sushant Mishra, 9-84 (26.3) Vidyadhar Patil, 10-106 (32.4) Karan Lal,

Bowling O M R W Econ
Tanzid Hasan 7 0 22 1 3.14
Mirttunjoy Chowdhury 7.4 0 18 3 2.43
Mohammad Shahin 4.5 0 26 1 5.78
Rakibul Hasan 7 0 31 0 4.43
Shamim Hossain 6 2 8 3 1.33
Tawhid Hridoy 0.1 0 1 0 10.00


Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan lbw b Akash Singh 0 4 0 0 0.00
Parvez Hossain c Varun Lavande b Vidyadhar Patil 5 3 1 0 166.67
Mahmudul Hasan c Dhruv Chand Jurel b Akash Singh 1 7 0 0 14.29
Tawhid Hridoy b Akash Singh 0 3 0 0 0.00
Shahadat Hossain c Dhruv Chand Jurel b Atharva Ankolekar 3 30 0 0 10.00
Akbar Ali c & b Atharva Ankolekar 23 35 2 0 65.71
Shamim Hossain c Varun Lavande b Atharva Ankolekar 7 17 1 0 41.18
Mirttunjoy Chowdhury c Thakur Tilak Varma b Sushant Mishra 21 26 2 1 80.77
Tanzid Hasan lbw b Atharva Ankolekar 12 35 0 0 34.29
Rakibul Hasan not out 11 34 0 0 32.35
Mohammad Shahin b Atharva Ankolekar 0 3 0 0 0.00


Extras 18 (b 0 , lb 6 , nb 0, w 12, pen 0)
Total 101/10 (33 Overs, RR: 3.06)
Fall of Wickets 1-3 (0.4) Tanzid Hasan, 2-13 (1.5) Parvez Hossain, 3-13 (2.3) Tawhid Hridoy, 4-16 (4.1) Mahmudul Hasan, 5-40 (10.5) Shahadat Hossain, 6-51 (14.2) Shamim Hossain, 7-78 (20.4) Akbar Ali, 8-78 (21.1) Mirttunjoy Chowdhury, 9-101 (32.3) Tanzid Hasan, 10-101 (32.6) Mohammad Shahin,

Bowling O M R W Econ
Akash Singh 5 0 12 3 2.40
Vidyadhar Patil 8 0 25 1 3.12
Atharva Ankolekar 8 2 28 5 3.50
Sushant Mishra 9 2 27 1 3.00
Karan Lal 3 1 3 0 1.00



முடிவு – இந்திய 19 இளையோர் அணி 5 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…