மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக முதன் முறையாக ஒழுங்கு செய்யப்படவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் வீராங்கனைகள் ஏலம் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> மகளிர் T20 உலகக் கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு
மகளிர் IPL என அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரினை முதன் முறையாக இந்த ஆண்டின் மார்ச் மாத ஆரம்பத்தில் நடாத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏற்பாடு செய்திருக்கின்றது.
அந்தவகையில் இந்த தொடரின் வீராங்கனைகள் ஏலம் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி டெல்லியில் அல்லது பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மும்பையில் நடைபெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐந்து அணிகள் பங்குபெறும் மகளிர் பிரீமியர் லீக் தொடரினுடைய உரிமையாளர்களின் அணிகள் தற்போது ILT20 மற்றும் SA20 தொடர்களில் பங்கெடுத்து வருகின்றன. இந்த இரு தொடர்களிலும் இறுதிப் போட்டிகள் முறையே பெப்ரவரி 12 & 13 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன.
>> பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் சந்திக்க ஹதுருசிங்க
இந்த நிலையில் வீராங்கனைகள் ஏலம் இம்மாதம் 06ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட போதும், அணி உரிமையாளர்கள் முன்னர் குறிப்பிட்ட கிரிக்கெட் தொடர்களை காரணமாக காட்டி ஏலத்தினை தாமதிக்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தும் மும்பையில் ஒழுங்கு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<