85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்

169

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் செஸில் ரைட் தனது 85ஆவது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். சுமார் 60 வருடங்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு 7,000 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியோடு, ஜமைக்காவைச் சேர்ந்த செஸில் ரைட் ஓய்வு பெற உள்ளார்.

முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ள இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……..

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் பிராங்க் வொரெல் ஆகியோருடன் சிசில் ரைட் விளையாடியிருந்தாலும், ஒரு சாதனை வீரராக அவரது பெயர் இடம்பெறாது. எனினும், அதிக காலம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட வயது முதிர்ந்த வீரராக சிசிலின் பெயர் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்

ஆரம்பத்தில் பர்படோஸ் அணியில் இடம்பெற்று விளையாடிய செஸில் ரைட், மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், வெஸ் ஹால் ஆகியோருக்கு எதிராகப் பந்துவீசி மிரள வைத்துள்ளார்

அதன்பின் கடந்த 1959ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு செஸில் ரைட் குடிபெயர்ந்தார். அங்கு சென்ட்ரல் லோன்செஸர் லீக்கில் கிராம்ப்டன் அணிக்காக ரைட் விளையாடினார். அதன்பின் இங்கிலாந்திலேயே நிரந்தரமாக செஸில் ரைட் வாழ்ந்து வந்தார்.

தனது 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ரைட் மிகுந்த உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் களத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

1970களின் பிற்பகுதியிலும், 1980களின் முற்பகுதியிலும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜோயல் கோர்னருடன் விளையாடிய செஸில் ரைட் இதுவரை 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக 5 பருவகாலங்களில் விளையாடிய ரைட் 538 விக்கெட்டுகளை கைப்பற்றி பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது, இவரின் பந்துவீச்சு சராசரி என்பது ஒவ்வொரு 27 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் என்பதாக இருந்துள்ளது. எனினும், இது குறித்த சரியான கணக்கு எங்கும் இல்லை. அப்படி இருந்தால், கிரிக்கெட் உலகில் இது பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், இவர் இதுவரை காலமும் எந்தவொரு முதல் தர போட்டிகள் போல பதிவு செய்யப்பட்ட போட்டிகளில் விளையாடாததால், .சி.சி இவரை ஒரு கிரிக்கெட் வீரராக அங்கீகரிக்குமா? என தெரியவில்லை

இந்த நிலையில், தற்போது 85 வயதாகிவிட்டதால், செஸில் ரைட்டால் வேகப் பந்துவீச்சை முன்பு இருந்த அளவுக்கு வீச முடியவில்லை என்பதால், கிரிக்கெட் விளையாட்டுடான தனது பயணத்தில் இருந்து விடைபெற உள்ளார்

லண்டனில் வெளியாகும் டெய்லிமெயில் நாளிதழுக்கு செஸில் ரைட் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், இன்னும் நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என விரும்பினேன். ஆனால் எனக்குத் தெரியும் என்னால் விளையாட முடியாது. என் உடல் அதற்காக ஒத்துழைக்காது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் அனைத்தையும் சாப்பிடுவேன். ஆனால் குடிக்க மாட்டேன். உடல் வலி ஏற்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இருப்பேன்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள …

நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் எனது உடலை நான் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்திருந்தேன். எனது பயிற்சியை நான் ஒருபோதும் மறந்தது இல்லை. ஒருபோதும் வீட்டில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை விரும்பமாட்டேன்.

60 வருடங்களில் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளீர்? என்ற கேள்வியை கேட்ட போதுதனக்கு சரியான கணக்கு தெரியவில்லை” என கூறினார். 

”தற்போதும் நான் ஓல்ட்ஹோம் அணிக்காக விளையாடி வருகிறேன். எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி பென்னி லீக் போட்டியில் ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் நான் ஓய்வு பெற இருக்கிறேன்” என செஸில் ரைட் தெரிவித்துள்ளார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<