ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி அடுத்த வருடம் ஜூன் மாதம் லண்டனில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 9 அணிகள் இடையே கடந்த வருடம் ஆரம்பமாகியது. 27 தொடர்களை உள்ளடக்கியதாக 71 டெஸ்ட் போட்டிகள் இந்தத் தொடரின் கீழ் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை?
குறிப்பிட்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் முடிவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இதுவரை 4 தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணி 292 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.
180 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4ஆவது இடத்திலும், 166 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5ஆவது இடத்திலும், 80 புள்ளிகளுடன் இலங்கை அணி 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் அச்சத்தால் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், சில தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.
இதில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135
இதனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை பிற்போட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டன. எனினும் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர்கள் மூடிய மைதானத்துக்குள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, திட்டமிட்டபடி அடுத்த வருடம் (2021) ஜூன் மாதம் லண்டனில் இறுதிப் போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதை நோக்கி பயணிக்கிறோம். எப்படி புள்ளிகளை பகிர்வது, ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை நடத்துவது என்பன குறித்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹரிசன் ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
முப்பதுக்கு பின் முன்னுரிமை டில்ஷான்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ”ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்துவது சவாலாக இருக்கும். நாங்கள் இதுதொடர்பில் பேசி வருகிறோம், நீங்கள் கொவிட் – 19 போன்ற விடயங்களை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும்போது, அது எல்லாவற்றையும் மாற்றுகிறது” என்று கூறினார்.
இதுஇவ்வாறிருக்க, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<