உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடுவர் குழாத்தில் தர்மசேன

250

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போட்டி உத்தியோகத்தர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்திய அணியில் ருதுராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால்

2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், இறுதிப் போட்டியின் மைதான  நடுவர்களாக நியூசிலாந்தை சேர்ந்த கிறிஸ் கப்னி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வேர்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் கிறிஸ் கப்பானியிற்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 48ஆவது டெஸ்ட் போட்டியாக மாற, ரிச்சர்ட் இல்லிங்க்வேர்த்திற்கு இது 68ஆவது டெஸ்ட் போட்டியாக காணப்படுகின்றது.

அத்தோடு ரிச்சர்ட் இல்லிங்வேர்த் இரண்டாவது முறையாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டல்போரோக் செயற்பட, நான்காவது நடுவராக செயற்படும் வாய்ப்பு இலங்கையின் முன்னாள் வீரரும் போட்டி நடுவருமான குமார் தர்மசேனவுக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்சன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<