அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்
தென்னாபிரிக்க ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஒருநாள் குழாத்தில் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கிய நிலையில் அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் உள்வாங்கப்பட்ட வீரர்களான நேதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் அவுஸ்திரேலியாவின் உலகக் கிண்ண குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேநேரம், அவ்வணிக்காக இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் ஆடியிருக்கும் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் ஷோன் அப்போட்டிற்கும் அவுஸ்திரேலிய உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர் தவிர உலகக் கிண்ண அணியில் காணப்படும் ஏனைய வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக மிச்சல் மார்ஷ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இதேவேளை அணியின் சுழல் பந்துவீச்சாளர் பொறுப்பு கிளன் மெக்ஸ்வெல், அடம் ஷம்பா மற்றும் அஸ்டன் ஏகார் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அவுஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ண குழாத்தினை நோக்கும் போது டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் அதன் முன்னணி துடுப்பாட்ட வீரர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் தவிர மிச்சல் ஸ்டார்க் அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் இந்தியாவினை ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றது.
இதேநேரம் அவுஸ்திரேலிய அணி தமது குழாத்தில் இம்மாதம் 28ஆம் திகதி வரை மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அவுஸ்திரேலிய குழாம்
பெட் கம்மின்ஸ் (தலைவர்), சீன் அப்போட், அஸ்டன் ஏகார், அலெக்ஸ் கெரி, கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வோனர், அடம் ஷம்பா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<