2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) முதல் சுற்றில் போட்டியிடும் அணிகளை தேர்வு செய்யும் குலுக்கல் முறை நாளை (17) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெறவுள்ளது.
அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் கட்டார் அந்த போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் 32 அணிகளில் 31 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் பிஃபாவின் ஆறு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது.
கம்போடியாவிடம் படுதோல்வி கண்டது இலங்கை
கம்போடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய ….
பிஃபா அங்கத்துவத்தை பெற்ற 210 நாடுகளும் இந்த தகுதிகாண் சுற்றில் பங்கேற்க தகுதி உடையவையாகும்.
பிஃபா மாநாட்டுக்குப் பின்னர் 2015 மே 30 ஆம் திகதி சூரிச்சில் நடைபெற்ற பிஃபா நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் ஒவ்வொரு கூட்டமைப்புக்காகவும் ஒதுக்கப்படும் இடங்கள் பேசப்பட்டன. அதன்படி 2006 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டு பின்னர் 2010, 2014, 2018 இல் பயன்படுத்தப்பட்ட முறையையே 2022 தொடர்களிலும் பயன்படுத்துவதற்கு அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
- CAF (ஆபிரிக்கா): 5
- AFC (ஆசியா): 4 அல்லது 5 (போட்டியை நடத்தும் நாடு தவிர்த்து)
- UEFA (ஐரோப்பா): 13
- CONCACAF (வட மற்றும் மத்திய அமெரிக்கா அல்லது கரீபியன்): 3 அல்லது 4
- OFC (ஓசியானியா): 0 அல்லது 1
- CONMEBOL (தென் அமெரிக்கா): 4 அல்லது 5
போட்டியை நடத்தும் நாடு என்பதால் கட்டார் நேரடியாக தேர்வாகும் நிலையில் அந்த நாடு தவிர்த்து உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு AFC இல் மொத்தம் 4.5 இடங்கள் (4 நேரடி இடங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையிலான பிளே-ஓப் சுற்று மூலம் ஓர் இடம்) ஒதுக்கப்பட்டுள்ளன.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பக்கீர் அலி பதில்
பஹ்ரெய்னில் அண்மையில் நிறைவுக்கு வந்த 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்….
நான்கு சுற்றுகளாக தேர்வுகள் இடம்பெறவிருப்பதோடு, இதில் முதல் இரு சுற்றுகள் மூலம் 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கான அணிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. இதனால் 2022 பிஃபா உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டாரும் முதல் இரு சுற்று தகுதிகாண் போட்டிகளிலும் பங்கேற்கும்.
தகுதிகாண் அமைப்பு பின்வருமாறு;
முதல் சுற்று: 12 அணிகள் (36–46 தரவரிசை) இரண்டு கட்டங்களாக (Legs) உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் ஆடும். ஆறு வெற்றியாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும்.
இரண்டாவது சுற்று: 40 அணிகள் (1–34 தரவரிசை அணிகள் மற்றும் ஆறு முதல் சுற்று வெற்றியாளர்கள்) ஐந்து அணிகளாக எட்டுக் குழுக்கள் பிரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டின் ரவுண்ட்-ரொபின் போட்டிகளில் ஆடும். எட்டுக் குழுக்களினதும் வெற்றியாளர்கள் மற்றும் நான்கு சிறந்த குழுநிலை வெற்றியாளர்கள் பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுவதோடு 2023 AFC ஆசிய கிண்ணத்திற்கும் தகுதி பெறும்.
மூன்றாவது சுற்று: தொடரும்.
நான்காவது சுற்று: தொடரும்.
பங்களாதேஷிடம் போராடித் தோற்றது இலங்கை
பஹ்ரைனில் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்ட “2020 AFC கால்பந்து சம்பியன்ஷிப்”….
இலங்கையின் நிலை
பிஃபா உலகத் தரவரிசையில் 202 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை AFC தரவரிசையில் கடைசி இடமாக 46 ஆவது இடத்தில் இருந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியை முதல் சுற்றில் இருந்து ஆரம்பிக்கிறது. நாளை இடம்பெறவுள்ள குலுக்கலில் 12 அணிகளும் இரண்டு பாத்திரங்களில் ஆறு ஆறாக இடப்படும் (அந்த அணிகளின் உலகத் தரவரிசை அடிப்படையில்). இதன்படி பாத்திரம் 1 இல் இருந்து ஓர் அணியும் பாத்திரம் 2இல் இருந்து ஓர் அணியும் எடுக்கப்படும்.
FFSL தலைவர் மற்றும் சகாக்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
கடந்த வார இறுதியில் முக்கிய திருப்பமாக இலங்கை கால்பந்து சம்மேளனத் (FFSL)….
வாய்ப்பு எப்படி?
2018 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக 2015இல் இலங்கை அணி முதல் சுற்றில் ஆடியது. அப்போது தரவரிசையில் 172 ஆவது இடத்தில் இருந்த இலங்கை குலுக்கல் முறையில் உலகத் தரவரிசையில் கடைசி இடமாக 209 ஆவது இடத்தில் இருந்த பூட்டானை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எதிர்பாராத விதமாக பூட்டானிடம் இலங்கை தனது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியை 1-0 என தோற்றதோடு பூட்டானில் நடந்த போட்டியில் 2-1 என தோற்று அதிர்ச்சி அளித்தது.
இம்முறை இலங்கை அணி மலேசியா, கம்போடியா, மகாவு, லாவோஸ், பூட்டான் அல்லது மங்கோலியாவை முதல் கட்டமாக எதிர்கொள்ளும். இலங்கை அணி கம்போடியாவை கடைசியாக சந்தித்தது 2016 ஆம் ஆண்டு நட்புறவு போட்டி ஒன்றிலாகும். அதில் கம்போடியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Photo Album : Sri Lanka v Lithuania – International Friendly 2018 (8th July)
2016 AFC ஒருமைப்பாட்டுக் கிண்ணத்திற்கான போட்டியில் இலங்கை அணி லாவோஸ், மங்கோலியா மற்றும் மகாவு அணிகளை எதிர்கொண்டது. இதில் பிந்திய நேரத்தில் பெற்ற கோல்கள் மூலம் லாவோஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்றதோடு, மங்கோலியா 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை மற்றும் மகாவு அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமநிலை பெற்றது.
மிக அண்மையில் 2018இல் இலங்கை அணி மலேசியாவுக்கு எதிராக கொழும்பில் ஆடிய போட்டியில் வருகை அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது.
முதல் சுற்றுக்கான குலுக்கல் 2019 ஏப்ரல் 17 ஆம் திகதி இலங்கை நேரப்படி மு.ப. 8.30க்கு இடம்பெறவுள்ளது. இதன் முதல் கட்டப் போட்டி ஜூன் 6 ஆம் திகதியும் 2ஆம் கட்டப் போட்டி ஜூன் 11 ஆம் திகதியும்நடைபெறும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<