இந்த ஆண்டுக்கான (2023) ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
இலங்கையின் பயிற்சிப் போட்டி அட்டவணை வெளியீடு
இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இந்தியாவில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் தொடரின் போட்டி அட்டவணையோ அல்லது தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த அறிவிப்போ இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் மைதானங்கள், தொடரின் போட்டி அட்டவணை என்பவை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதன்படி இந்த உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை, உலகக் கிண்ணத் தொடரின் போட்டி நடைபெறும் மைதானங்கள் என்பன அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது வெளியிடப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) குறிப்பிட்டிருக்கின்றது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை ஓவல் மைதானத்தில் நடைபெறவிருப்பதோடு, இந்த இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவினை எதிர் கொள்ளவிருக்கின்றது.
பலமிக்க குழாத்துடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அமெரிக்கா
இதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மேலும் உலகக் கிண்ணம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பில், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள ஒவ்வொரு மைதானத்திற்காகவும் விஷேட அலுவலகம் ஒன்றிணை அமைப்பதாக தெரிவித்திருப்பதோடு குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு விஷேட பொறுப்புக்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<