2018 உலகக் கிண்ணம்: ஸ்பெயின் அணியின் முன்னோட்டம்

1159

பிஃபா உலகத் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் இம்முறை தொடர்ச்சியாக 11 ஆவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளது. இதுவரை பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற எட்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புகள் கொண்ட அணிகளில் ஒன்றாகவும் உள்ளது.

2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்

உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற…

உலகக் கிண்ண வரலாறு

1934 ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஸ்பெயினின் கால்பந்து வரலாறு நீண்டது. அந்த அணி இரண்டு முறை அரையிறுதிக்கு முன்னேறியதோடு அதில் முதல் முறை 1950 ஆம் ஆண்டு அந்த அணி தொடரில் 4 ஆவது இடத்தை பெற்றது.

ஐரோப்பிய சம்பியன்களாக, 2010 தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கிண்ண போட்டியில் ஆடிய ஸ்பெயின், இறுதிப் போட்டியில் அன்ட்ரஸ் இனியஸ்டாவின் வெற்றி கோல் மூலம் நெதர்லாந்தை 1-0 என வீழ்த்தி சம்பியனானது.    

  • 1934 – காலிறுதி
  • 1950 – 4ஆம் இடம்
  • 1962 – குழு நிலை
  • 1966 – குழு நிலை
  • 1978 – குழு நிலை
  • 1982 – குழு நிலை
  • 1986 – காலிறுதி
  • 1990 – 16 அணிகள் பங்குகொள்ளும் சுற்று
  • 1994 – காலிறுதி
  • 1998 – குழு நிலை
  • 2002 – காலிறுதி
  • 2006 –16 அணிகள் பங்குகொள்ளும் சுற்று
  • 2010 – சம்பியன்
  • 2014 – குழு நிலை

2014 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனைஒரு உலகக் கிண்ண பேரழிவுஎன்று அழைப்பார்கள். நடப்புச் சம்பியனாக களமிறங்கிய அந்த அணி தொடரில் நெதர்லாந்து மற்றும் சிலியிடம் முறையே 5-1 மற்றும் 2-0 என தோல்வி அடைந்தது.  

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

தகுதிகாண் போட்டியின்போது ஸ்பெயின் லைச்டன்ஸ்டைன் (8-0) அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு அது அந்த அணி 2018 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெற உதவியது. தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி மற்றும் அல்பேனிய அணிகளை தலா 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

எனினும் ஐரோப்பாவின் தகுதிகாண் சுற்றுகளின்போது அரசியல் தலையீடு காரணமாக ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தில் தகுதி இழப்பு செய்வது குறித்து பிஃபாவின் எச்சிரிக்கைக்கு முகம்கொடுத்தது. எனினும் அந்த அணி போட்டிகளில் வீழ்த்தப்படாத அணியாக தொடர்ந்து நீடித்தது.

பின்னர் இஸ்ரேலுக்கு எதிரான போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று ஸ்பெயின் உலகக் கிண்ணத்திற்கான தகுதியை உறுதி செய்து கொண்டது. அண்மைய நட்புறவு போட்டிகளில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தை சமநிலை செய்த ஸ்பெயின் ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பெற்றது.

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

2014 உலகக் கிண்ண போட்டிக்கு பின்னர் விசென்டே டெல் பொஸ்குவுக்கு பதில் ஸ்பெயின் அணியின் முகாமையாளராக இணைந்த ஜுனல் லொபடிகியு அந்த அணியில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். இளைய மற்றும் மூத்த வீரர்களிடையே நாளுக்கு நாள் மாற்றங்களை கொண்டுவந்து பரீட்சாத்தங்களில் ஈடுபட்டார்.

ஜப்பானிய அணியில் இணையும் பார்சிலோனா ஜாம்பவான் இனியஸ்டா

பார்சிலோனா கால்பந்து கழகத்தின்…

19 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட ஸ்பெயின் இளம் அணிகளுக்கு பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்ற அவர் உயர்மட்ட அளவில் ஒரு பயிற்சியாளராக ரஷ்யாவில் முதல் முறை ஸ்பெயின் அணியை வழிநடத்தவுள்ளார்.

லொபடிகியுவின் பயிற்றுவிப்பின் கீழ் முன்களத்தின் எல்லையில் ஆடும் வீரர்களின் பற்றாக்குறை காரணமாக கடந்த உலகக் கிண்ணத்தின் 4-3-3 இலிருந்து 4-5-1 ஆக அணியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ரஷ்யா செல்லும் குழாம் குறித்து அவரது முடிவுகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலமும் பலவீனமும்

மைதானத்தில் கையாளும் உத்திகள் மற்றும் தனித்துவமான ஆட்டமே அந்த அணியின் பலமாக உள்ளது. பார்சிலோனா மற்றும் ரியெல் மெட்ரிட் அணிகளின் அதிகமான வீரர்களை உள்ளடக்கி இருப்பது அந்த அணிக்கு வலுச் சேர்க்கிறது. கெரார்த் பிகு மற்றும் செர்ஜியோ ரமோஸ் பின்களத்தில் ஆதிக்கம் செலுத்துவது அணிக்கு பலமாகும்.

லொபடிகியுவின் அணித்தேர்வு சரிசமமாக இருக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு உண்மையான பலமாக அமையும். செர்ஜியோ புஸ்கெட்ஸ் கால் பெருவிரல் காயத்தில் அவதிப்படுவதோடு அவரது உடல் தகுதி அணியின் 11 வீரர்களுக்குள் அவரை இணைப்பதாக இருக்கும்.

சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அல்வாரோ மொராடா ஒரு மாற்று வீரராக டியாகோ காஸ்டாவுக்கு பதில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு அவர் தொடர்ந்து ஆட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் அவர் அணிக்கு திரும்பினால் அது மோர்டாவுக்கு சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் அணியின் முன்கள இரு வீரர்களுக்கான தேர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

முக்கிய வீரர்கள்

ஸ்பெயின் அணிக்காக அதிக கோல்கள் பெற்றிருக்கும் முன்னாள் அணித்தலைவர் டேவிட் வில்லா போன்ற பொற்கால தலைமுறையின் பல வீரர்களும் ஓய்வு பெற்றுள்ளனர். 2010 உலக சம்பியன் அணியில் இருந்த எக்சாவி ஹெர்னான்டஸ் மற்றும் எக்சாபி அலொன்சோவுடன் பெர்னாண்டோ டொரஸ் மற்றும் கார்லஸ் புயோல் ஆகிய பெரிய பெயர்கள் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அவர்கள் ரஷ்யாவில் இடம்பெற மாட்டார்கள்.

எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை கைப்பற்ற புதிய குழாம் ஒன்று அணிதிரண்டுள்ளது. செர்ஜியோ ரமோஸ் ஸ்பெயின் அணியின் இரண்டாவது அனுபவம் மிக்க வீரராக இருப்பதோடு அணித்தலைவராக மிக முக்கிய வீரராகவும் முதன்மை வீரராகவும் உள்ளார். ரியெல் மெட்ரிட் அணியின் பின்களத்தின் மத்தியில் ஆடும் வீரரான ராமோஸ் பந்தை உயரச் செலுத்துவது மற்றும் பரிமாற்றும் திறன்கள் மூலம் எதிரணிக்கு சவாலாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. பெனால்டி எல்லைக்குள் தீர்மானிக்கப்பட்ட வீரராக கடைசி கட்டம் வரையில் நிலைத்திருப்பது அவரது பலவீனமாக பார்க்கலாம்.

ஸ்பெயின் சம்பியனாக பட்டம் வெல்ல வெற்றி கோல் அடித்த பார்சிலோனாவின் முன்னாள் அணித்தலைவரும் மத்திய கள வீரருமான அன்ட்ரஸ் இனியெஸ்டா மற்றொரு முக்கிய வீரராவார்.  

நெய்மாரின் அபார கோலுடன் பிரேசில் அணிக்கு இலகு வெற்றி

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத்…

பார்க்க வேண்டியது

ரியெல் மெட்ரிட் நட்சத்திரமான இஸ்கோ, ஒரு தாக்குதல் மத்திய கள வீரராக இத்தாலிக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தியவராவார். அவருடன் லொபடிகியுவின் பயிற்சியின் கீழ் அதிகப்படியாக 11 கோல்கள் பெற்ற டேவிட் சில்வா பார்க்கப்பட வேண்டிய வீரராக உள்ளார்.

ரியெல் மெட்ரிட் நட்சத்திரம் மார்கோ அசென்சியோவும் ரஷ்யாவில் ஒரு திருப்புமுனை வீரராக இருக்க வாய்ப்பு உள்ளது.   

இறுதிக் குழாம்

கோல்காப்பாளர்கள்: கெபா அரிசபலங்கா, டேவிட் டி கீ, பெபெ ரெய்னா

பின்கள வீரர்கள்: ஜோர்டி அல்பா, நசோ மொன்ரியல், சீசர் அஸ்பிலிகியுடா, டானி கர்வஜால், நசோ, அல்வாரோ ஒட்ரியோசோலா, கெரார்ட் பிகு, செர்கியோ ரஜிஸ்

மத்தியகள வீரர்கள்: மார்கோ அசன்சியோ, செர்கியோ புஸ்கியுட், அன்ட்ரஸ் இனியஸ்டா, இஸ்கோ, கோகே, சவுல் நிகுவஸ், டேவிட் சில்வா, தியாகோ அல்சன்டாரா, லூகாஸ் வாஸ்குவஸ்

முன்கள வீரர்கள்: இகோ அஸ்பாஸ், டிகோ கொஸ்டா, ரொட்ரிகோ

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<