இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கிண்ணத்தை நூழிலையில் தவறவிட்ட பலம்மிக்க பிரான்ஸ் அணி வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட அணிகளில் ஒன்றாகவே இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கிறது.
உலக கால்பந்து அரங்கில் சில மிகப்பெரிய பெயர்களை தனது குழாத்தில் உள்ளடக்கி இருக்கும் பிரான்ஸ், பல திறமைகள் மூலம் தாம் உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க தகுதிவாய்ந்தது என்று நிரூபித்துள்ளது.
சிடானின் இடத்திற்கு ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளரை இணைக்கும் ரியெல் மெட்ரிட்
ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய்…
உலகக் கிண்ண வரலாறு
1958 உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடித்ததே பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத்தில் முதல் முறை தாக்கம் செலுத்திய தொடராக இருந்தது. 1986 ஆம் ஆண்டும் இதே நிலையை மீண்டும் பெற்ற அந்த அணி கடைசியில் 1998 இல் உலகக் கிண்ணத்தை வென்று உலக நட்சத்திரங்களை உருவாக்கியது.
1998 பிரான்ஸ் அணியின் தலைவர் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் டிடியர் டெசம்ப்ஸுடன் சனாடின் சிடான், தியரி ஹென்ரி, டேவிட் ட்ரசகுட், லிலியம் துரம் மற்றும் எம்மானுவேல் பெடிட் ஆகியோர் அப்போது பிரான்ஸ் அணியின் நட்சத்திரங்களாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து 2006 இல் இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களிலும் முதல் சுற்றுடனேயே வெளியேறி திறமையை நிரூபிக்கத் தவறியது.
இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் A குழுவில் 7 வெற்றிகள், 2 சமநிலைகள் மற்றும் அந்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்த சுவீடனுடனான போட்டியில் தோல்வி என்று மொத்தம் 23 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணி இலகுவாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. எனினும், பிரான்ஸ் அணியின் தகுதிகாண் போட்டிகள் அதிகம் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. சிறந்த தற்காப்பை பதிவு செய்துகொண்ட பிரான்ஸ் 6 கோல்களையே விட்டுக்கொடுத்தபோதும் அந்த அணி 16 கோல்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இது ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் வெற்றி கொண்ட அணிகளில் இரண்டாவது மிகக் குறைந்த கோல்களாகும்.
2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்
போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை வென்று உலகுக்கு அதிர்ச்சி …
பெலாரஸ் (வெளிநாட்டில்) மற்றும் லக்சன்பேர்க் (உள்நாட்டில்) அணிகளுக்கு எதிரான பிரான்ஸின் இரண்டு போட்டிகளுமே 0-0 என்று கோலின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் சுவீடன் 12 கோல்களை பெற்றது. எனினும் தகுதிகாண் போட்டிகள் முடிந்த பின் அண்மைய நட்புறவு போட்டிகளில் பிரான்ஸ் அணி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. அந்த அணி வேல்ஸ் (2-0) மற்றும் ரஷ்யா (3-1) அணிகளுக்கு எதிரான போட்டிகளை வென்றதோடு ஜெர்மனிக்கு எதிராக ஆட்டத்தை (2-2) சமநிலை செய்தது.
முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி
2012 யூரோ கிண்ணத்தை அடுத்தே டிடியர் டெசம்ப்ஸ் பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அவர் 2016 யூரோ கிண்ணத்திற்கு அணியை கட்டியெழுப்பினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த தொடரில் பிரான்ஸ் இறுதிப் போட்டிவரை முன்னேறி போர்த்துக்கல்லிடம் மேலதிக நேரத்தில் 1-0 என கிண்ணத்தை இழந்தது.
தகுதிகாண் போட்டிகளின்போது அவர் பிரதானமாக 4-2-3-1 என்ற ஆட்ட பாணியிலேயே அணியை வழிநடத்தினார். இதன்போது அன்டனி கிரிஸ்மான் மத்திய முன்களத்திற்கு பின்னால் முக்கிய முன்கள வீரராக நிறுத்தப்பட்டார். இந்த அமைப்பு அணிக்கு முன்களத்தில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்தியதோடு அணியின் சமநிலை போக்கை பேணவும் உதவியது.
2016 யூரோ கிண்ணத்தில் இதே அமைப்பு கடைப்பிடிக்கப்பட்டபோது போல் பக்பா அதிகம் தற்காப்பு ஆட்டத்திற்கு தள்ளப்பட்டதோடு அது அவரது முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.
பலமும் பலவீனமும்
பிரான்ஸ் அணியில் விரவி இருக்கும் திறமையே அந்த அணியின் மிகப்பெரிய பலமாகும். அணியின் 23 வீரர்களையும் வைத்து மிக திறமையான இரண்டு தேசிய அணிகளை உருவாக்க முடியும். அது எந்த ஒரு அணிக்கும் சவால் விடுப்பதாகவும் இருக்கும். அணி வீரர்களை தொடர்ச்சியாக மாற்றி அணியை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க முடியுமான நிலையில் பிரான்ஸ் உள்ளது.
அந்த அணியில் கால்பந்து உலகில் இரு நம்பிக்கை தரும் வீரர்கள் உள்ளடங்குகின்றனர். ஒஸ்மானே டெம்பேலே மற்றும் கைலியன் ம்ப்பே ஆகிய அந்த இரு வீரர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் வேகம் எதிரணியின் பாதுகாப்பு அரணுக்கு கடும் சவாலாக இருக்கும்.
பயிற்சியாளர் டிடியர் டெசம்ப்ஸின் திறமை பற்றி இன்னும் சந்தேகங்கள் இருப்பது பலவீனமாகும். பலமான அணிகள் மற்றும் நொக் அவுட் சுற்றுகளில் அவர் தம்வசம் இருக்கும் குழாத்தை கையாளுவது போட்டியின் உத்தி பற்றி சந்தேகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
லோரண்ட் கொசியல்னி உட்பட வீரர்களின் காயங்கள் அணிக்கு பாதிப்பாக உள்ளது. ஐரோப்பிய லீக் இறுதியில் உபாதைக்கு உள்ளான ட்மிட்ரி பயெட் உலகக் கிண்ண குழாமில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேபோன்று பென்ஜமின் மென்டி மற்றும் ஓஸ்மானே டெம்பலே தனது காயங்களில் இருந்து மீண்டு அண்மையிலேயே தேசிய அணிக்கு திரும்பினார்கள். அவர்கள் போதிய பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது அவதானத்திற்குரிய மற்றொரு விடயமாகும்.
ஆஸ்திரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நடப்புச் சம்பியன் ஜெர்மனி
பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தயாராகி வரும் நடப்புச் சம்பியன் ஜெர்மனி தனது …
முக்கிய வீரர்கள்
அன்டனி கிரிஸ்மான் யூரோ கிண்ண தொடரில் தங்கப்பாதணி மற்றும் சிறந்த வீரர் விருதுகளை வென்ற பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சின் சிறந்த வீரராக இருந்து வருகிறார். அவர் தகுதிகாண் போட்டிகளில் பிரான்ஸ் குழாத்தில் 4 கோல்கள் மற்றும் 4 கோல் உதவிகள் என அதிக கோல் பெற்றவராகவும் அதிக கோல்களுக்காக உதவியை வழங்கியவராகவும் உள்ளார்.
பெரும்பாலான தகுதிகாண் போட்டிகளில் 9ஆம் இலக்க வீரராக இருந்த ஒலிவியர் கிரௌட்டும் நான்கு கோல்களை புகுத்தியதோடு ஒரு கோல் உதவியை பெற்றுக்கொடுத்துள்ளார். ட்மிட்ரி பயெத் பிரான்ஸ் வரிசையில் உள்ள மற்றொரு ஸ்திரமான வீரர் ஆவார். மத்திய களத்தில் இருந்து அவர் 2 கோல்கள் மற்றும் 2 கோல் உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தகுதிகாண் போட்டிகளில் மத்தியகள வீரராக போல் பொக்பாவும் இரண்டு கோல்களை பெற்றார்.
நம்பிக்கைக்குரிய மத்திய பின்கள வீரரான ரபயேல் வரனேவுடன் சாமுவேல் உம்டிடி ஒன்றிணைய வாய்ப்பு இருப்பதோடு ட்ஜிப்ரில் சிடிபே புல்–பக் (Full-back) இடத்தில் முதல் தேர்வாக உள்ளார். 2012 தொடக்கம் அணித்தலைவராக செயற்படும் கோல்காப்பளரான ஹுகோ லொரிஸ் தான் விளையாடிய 9 போட்டிகளில் எதிரணியின் நான்கு கோல் வாய்ப்புகளை தடுத்து முன்னுதாரணமாக செயற்பட்டு வருகிறார்.
2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்
உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற பெருமையை பெற்றிருந்தபோதும் 1966 …
பார்க்க வேண்டியது
அன்டனி கிரிஸ்மான் இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரான்ஸின் மிகப்பெரிய வீரராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. எனினும் கைலியன் ம்பபே பிரான்ஸ் அணியில் ஆடுவதை பார்க்க எல்லோரும் விரும்புகின்றனர். தகுதிகாண் போட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவே வாய்ப்பு கிடைத்த நிலையில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்காக இந்த பருவத்தில் சிறப்பாக செயற்பட்ட அவர் 21 கோல்கள் மற்றும் 11 கோல் உதவிகளை பெற்றுள்ளார்.
அவரது மின்னல் வேக ஆட்டம், நுட்பமான திறமை காரணமாக ஏற்கனவே பலரும் அவரை தியரி ஹென்ரியுடன் ஒப்பிடுகின்றனர். அசாதாரண திறமை கொண்ட ஒரு வீரர் என்ற நிலையில் இருந்து உலக நட்சத்திரமாக மாறுவதற்கான களத்தை அவருக்கு உலகக் கிண்ணம் ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக் குழாம்
கோல்காப்பாளர்கள்
ஹுகோ லொரிஸ், ஸ்டீவ் மக்டன்டா, அல்பொன்சே ஏரியோலா
பின்கள வீரர்கள்
லூகாஸ் ஹெர்னான்டஸ், ப்ரெஸ்னல் கிம்பம்பே, பென்ஜமின் மெண்டி, பென்ஜமின் பவார்ட், ஆடில் ராமி, ட்ஜிப்ரில் சிடிபே, சாமுவேல் உம்டிடி, ரபேல் வரனே
மத்தியகள வீரர்கள்
ந்கோலோ கன்டே, ப்ளைஸ் மடுயிடி, ஸ்டீபன் ந்சொன்சி, போல் பொக்பா, கொரன்டின் டொலிசோ
முன்கள வீரர்கள்
ஒஸ்மானே டம்பேலே, நபில் பெகிர், ஒலிவியர் கிரௌட், அன்டனி கிரிஸ்மான், தோமஸ் லெமார், கைலியன் ம்பபே, ப்ளோரியன் தவுவின்
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…