இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ மற்றும் பங்களாதேஷின் சகீப் அல் ஹஸன் போன்ற முன்னணி வீரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
கொழும்பு ஸ்டார்ஸ், லைக்கா ஜப்னா கிங்ஸ், கண்டி பல்கோன்ஸ், தம்புள்ள ஓரா மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் ஆகிய 5 அணிகள் மோதும் இந்த தொடரின் வீரர்கள் பதிவுகள் மே 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>> இலங்கை தொடருக்கான தென்னாபிரிக்க A குழாம் அறிவிப்பு
மே 15ம் திகதி வீரர்கள் பதிவுகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் மாதம் 04ம் திகதி தொடருக்கான வீரர்கள் வரைவு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் LPL தொடரின் உரிமத்தை பெற்று நடத்திவரும் IPG நிறுவனம் சர்வதேச ரீதியில் உள்ள முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கீரன் பொல்லார்ட் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் விளையாட எதிர்பார்த்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் கரீபியன் பிரீமியர் லீக்கிற்காக மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.
மேற்குறித்த வீரர்களுடன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெதிவ் வேட், ஷோன் மார்ஷ், டி ஆர்சி ஷோர்ட் மற்றும் உஸ்மான் கவாஜா போன்ற வீரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
இவர்களுடன் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லுங்கி என்கிடி, இம்ரான், தாஹீர் மற்றும் டெப்ரைஷ் சம்ஷி ஆகியோருடன், பாகிஸ்தானின் மொஹமட் நவாஸ், நசீம் ஷா மற்றும் வஹாப் ரியாஷ் ஆகியோர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
>> “ரமேஷ் மெண்டிஸிற்கு கொடுத்த காலம் போதும்” – பியால் விஜேதுங்க!
World-Class Cricketers Set Sights on LPL 2023: Sri Lankas T20 Tournament Sparkles – Tamil அதேநேரம் நியூசிலாந்தின் மிச்சல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் செய்பர்ட், டெரைல் மிச்சல் மற்றும் டொக் பிரெஸ்வல் பங்களாதேஷின் சகீப் அல் ஹஸன், லிடன் டாஸ், அபிப் ஹொஷைன், அயர்லாந்தின் போல் ஸ்டைர்லிங், மே.தீவுகளின் ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் அஷ்லி நேர்ஷ் ஆகியோருடன் நமீபியாவைச் சேர்ந்த ஜெரார்ட் எரஸ்மஸ் ஆகியோரும் பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வீரர்கள்
- அவுஸ்திரேலியா – ஷோன் மார்ஷ், உஸ்மான் கவாஜா, மெதிவ் வேட், டி ஆர்சி ஷோர்ட்
- பங்களாதேஷ் – சகீப் அல் ஹஸன், லிடன் டாஸ், அபிப் ஹொஷைன்
- அயர்லாந்து – போல் ஸ்டைர்லிங்
- நமீபியா – ஜெரார்ட் எரஸ்மஸ்
- நியூசிலாந்து – மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி, டிம் செய்பர்ட், டெரைல் மிச்சல், டொக் பிரெஸ்வல்
- பாகிஸ்தான் – மொஹ்மட் நவாஸ், நசீம் ஷா, வஹாப் ரியாஸ்
- மேற்கிந்திய தீவுகள் – ஜொன்சன் சார்ல்ஸ், அஷ்லி நேர்ஷ், டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<