ஹர்ஷிதா, ஹன்சிமாவின் அபாரத்துடன் இறுதிப் போட்டியில் கிரேய்ஸ் அணி

SLC Women's Super Four 50 Over Tournament 2022

226

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் Super Four ஒருநாள் தொடரின் இன்று (23) நடைபெற்ற 6வது போட்டியில் க்ரீன் அணியை எதிர்கொண்ட கிரேய்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை போட்டி தொடரில் தோல்வியுறாத அணியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான கிரேய்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கி கிரேஸ் அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கிரேய்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் மீண்டும் அதிரடி காண்பித்த அணித் தலைவி ஹர்ஷிதா சமரவிக்ரம 78 ஓட்டங்களையும், ஹன்சிமா கருணாரத்ன 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

க்ரீன் அணியின் பந்துவீச்சில் ரஷ்மி சில்வா 4 விக்கெட்டுகளையும், சுலேஷா சத்சரனி 3 விக்கெட்டுகளையும், நிமேஷா மதுஷானி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பிரசாதனியின் பொறுப்பான ஆட்டத்தால் ரெட்ஸ் அணிக்கு வெற்றி

பின்னர் 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய க்ரீன் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 46 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

க்ரீன் அணிக்காக ஹஷினி பெரோ 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள, கிரேய்ஸ் அணி பந்துவீச்சில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகளையும், இனோஷி பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், கிரேய்ஸ் அணியானது, ரெட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கிரேய்ஸ் அணி – 202 (44) – ஹர்ஷிதா சமரவிக்ரம 78, ஹன்சிமா கருணாரத்ன 55, இமல்கா மெண்டிஸ் 22, ரஷ்மி சில்வா 4/46, சுலேஷா சத்சரனி 3/23, நிமேஷா மதுஷானி 2/34

க்ரீன் அணி – 156/8 (50) – ஹஷினி பெரேரா 50, அனுஷா சன்ஜீவனி 27, இனோகா ரணவீர 3/32, இனோஷி பெர்னாண்டோ 2/17

முடிவு – கிரேஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<