இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நேற்று (11) நடைபெற்ற மகளிருக்கான டிவிஷன் 1 உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் கோல்ட்ஸ் அணியை வெறும் 20 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி விமானப்படை அணி (A) இலகுவான வெற்றியை பதிவுசெய்துக்கொண்டது.
அத்துடன், சீனிகம கிரிக்கெட் கழகமானது, இராணுவ கழகத்தை (B) வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சாமரி அதபத்து தலைமையிலான சிலாபம் மேரியன்ஸ் அணியும் வெற்றியை தக்கவைத்தது.
>> IPL வரலாற்றில் ஆதிக்கத்தை காட்டும் KKR துடுப்பாட்ட வீரர்கள்!
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம் A
ஓசதி ரணசிங்க உட்பட விமானப்படை கழக வீராங்கனைகளின் அற்புதமான பந்தவீச்சின் காரணமாக 20 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 20/10 (14.4), அமதி விஜேசிங்க 4, ஓசதி ரணசிங்க 4/3, அமா காஞ்சனி 2/6, இனோஷி பெர்னாண்டோ 2/6
விமானப்படை விளையாட்டு கழகம் (A) – 21/0 (2), யசோதா மெண்டிஸ் 14*, சாமரி பொல்கம்பொல 5*
முடிவு – விமானப்படை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இராணுவப்படை விளையாட்டு கழகம் (B) எதிர் சீனிகம கிரிக்கெட் கழகம்
சீனிகம கிரிக்கெட் கழகத்துக்காக கவீஷா டில்ஹாரி சகலதுறையிலும் பிரகாசிப்பை வெளிப்படுத்தி, சீனிகம கிரிக்கெட் கழகமானது, இராணுவ அணியை (B) 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
சுருக்கம்
இராணுவப்படை விளையாட்டு கழகம் (B) – 57/10 (20.5), அயேஷா சந்தமாலி 17, இரேஷா தமயந்தி 15, கவீஷா டில்ஹாரி 4/9,
சீனிகம கிரிக்கெட் கழகம் – 63/10 (15.1), கவீஷா டில்ஹாரி 27*, நிஷாந்தி பத்மசந்திர 1/13
முடிவு – சீனிகம அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம் (B)
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அதபத்துவின் அரைச்சதம் மற்றும் விதுசிகா பெரேரவின் அற்புதமான பந்துவீச்சின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
சாமரி அதபத்து மிகச்சிறப்பாக ஆடி 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை விளாசியதுடன், விதுசிகா பெரேரா 17 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 171/10 (48.3), சாமரி அதபத்து 58, ஜனாதி அனாலி 23, சாதனி தெடுவம்குமார 2/29
விமானப்படை விளையாட்டு கழகம் (B) – 46/10 (17.4), சகீலா பிரேமரத்ன 16, விதுசிகா பெரேரா 6/17
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<