பெண்களுக்கான பிரிவு 1 இன் இறுதிக் குழு முறைப் போட்டி சரெ மைதானத்தில் இடம்பெற்றது

300
Sripali Shiromala Weerakkody.

நடைபெற்ற 4 போட்டிகளிலும் இராணுவ அணி, கோல்ட்ஸ் அணி, விமானப்படை அணி, கடற்படை அணிகள் இலகுவான வெற்றியைப் பெற்று இறுதி நான்கில் தனது இடங்களைத் தக்கவைத்துள்ளது.

ஜூலை 13இல் MCA மைதானத்தில் நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் கோல்ட்ஸ் அணி குழு 1இல் முதலாவது அணியாகத் தெரிவு செய்யப்பட்ட இராணுவ அணியையும் குழு 2 இல் முதலாவது இடத்தைப் பெற்ற விமானப்படை அணி கடற்படை அணியுடன் அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

சரே மைதானத்தில் இடம்பெற்ற 1ஆவது காலிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றி பெற்ற இராணுவ அணி எந்தவிதத் தடுமாற்றமும் இன்றி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர். ஆரம்பத்தில் அவர்கள் விக்கட்டுகளை இழந்தாலும் தமயந்தி சில்வா வின் அரைச்சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அதி கூடிய ஓட்டமான 154 ஓட்டங்களுக்கு 7விக்கட்டுகளை இழந்து இந்த இலக்கை அடைந்தனர்.

கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த மாத்தறை மகளிர் அணி எதிர் அணிக்கு சவால்விடும் அளவுக்கு ஆட்டம் பிரகாசிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

இராணுவ அணி -154/7(20) தமயந்தி சில்வா 53, இமல்கா மெண்டிஸ் 36, சயானி திலக்சிக்க 2/33

மாத்தறை அணி – 57/6(20) அப்சரா 21, செய்றன ரவிக்குமார் 2/7, லக்மாலி மாதானந்த 1/4

முடிவு – இராணுவ அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றது


2ஆவது போட்டி கடற்படை, விமானபடை அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இதில் கடற்படை அணி 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கடற்படை அணி 147 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றனர்.

இதில் இஷானி லொகொலுசோரிய 42 ஓட்டங்களை 22 பந்துகளிலும், ப்ரஸாதிநீ வீரக்கொடி 53 ஓட்டங்களை 63 பந்துகளிலும் பெற்றுக் கொண்டனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விமானப் படை அணியினர் 20 ஓவர்களில் 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுகொண்டார்கள். இதில் அதிக பட்சமாக மிஹிரி மதுஷானி 34 ஓட்டங்களைக் குவித்தார்.

கடற்படை B – 147/2 ப்ரஸாதிநீ வீரக்கொடி 53, இஷானிலொகொலுசோரிய 42, ஹர்சனிமதுவந்தி 1/18

விமானப்படை B – 89/7 மிஹிரி மதுஷானி 34, தர்ஷனி தமயசிறி 27, இநோக்க ரணவீர 3/16

முடிவு – கடற்படை B அணி 58 ஓட்டங்களால் வெற்றி அடைந்தது.


குழு B

கோல்ட்ஸ் அணிக்கும் இராணுவ Bஅணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் கோல்ட்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி அடைந்தது. இதிலுருந்து கோல்ட்ஸ் அணியினர்அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இதில் ஷாமின் ஷைலா, ஹர்ஷித்த சமரவிக்ரம ஆகியோரின் இணைப்பாட்டமாகப் பெற்ற 89 ஓட்டங்கள் கோல்ட்ஸ் அணியை வலுவான நிலைக்கு கொண்டுவந்தது.

கோல்ட்ஸ் – 134/4 ஷாமின் ஷைலா 52, ஹர்ஷித்த சமரவிக்ரம 42, R பேசல 1/12

இராணுவ B – 98/9 நிலுக்க குஷாந்தி 30, அயேஷா சந்தமலி 22, பூஜனி லியனாக 6/19

முடிவு – கோல்ட்ஸ் அணி 34 ஓட்டங்களால் இராணுவ B அணியை வெற்றிகொண்டது


அதைத் தொடர்ந்து இடம்பெற்ற விமானப்படை A மற்றும் கடற்படை B அணிகளுக்கிடையிலான போட்டியில் விமானப்படை A அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டி ரிஃப்லெ கிரீன் மைதானத்தில் இடம் பெற்றது. கடற்படை B அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 47ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். விமானப்படை அணியின் ஆரம்ப வீரர்கள் சமாரி அதப்பத்து, யசோதா மெண்டிஸ் ஆகியோர் 7.3 ஓவர்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

கடற்படை B அணி – 47 (15.4) ஷானிக்க லிங்கத்தேற 15, ஓஷதி ரணசிங்க 3/4, இனோஷ்பெர்னாண்டோ 2/0

விமானப்படை A அணி – 48/0(7.3) யசோதா மெண்டிஸ் 23, சமாரி அதப்பத்து 19

முடிவு – விமானப்படை A அணி 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது