மகளிர் ஆசியக் கிண்ண T20I தொடரில் இன்று (04) தமது மூன்றாவது போட்டியில் தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை 49 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
முதல் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை மகளிர்
மேலும் இந்த வெற்றி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆசியக் கிண்ண T20 தொடரில் கிடைத்த இரண்டாவது வெற்றியாகவும் மாறுகின்றது. அதேநேரம் இப்போட்டியின் தோல்வி ஆசியக் கிண்ணத் தொடரில் தாய்லாந்து மகளிர் அணிக்கு கிடைத்த இரண்டாவது தோல்வியாக காணப்படுகின்றது.
இரு அணிகளும் மோதிய போட்டி இன்று (04) பங்களாதேஷின் சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி வீராங்கனைகள் ஹர்சித மாதவியின் அதிரடி அரைச்சதத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்கள் பெற்றனர்.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்சித மாதவி 69 பந்துகளை எதிர்கொண்டு 10 பௌண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் இரண்டாவது T20I அரைச்சதமாகவும் அமைந்திருந்தது. இதேநேரம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலக்ஷி டி சில்வா 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 39 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் தாய்லாந்து மகளிர் அணி பந்துவீச்சில் திபச்சா புத்தவொங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண ஆடை அறிமுகம்
தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ச(Cha)னிதா சுத்திருவாங்க் 42 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சுக்காக அச்சினி குலசூரிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகி விருது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்சித மாதவிக்கு வழங்கப்பட்டது. இனி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (08) மலேசிய வீராங்கனைகளை எதிர்கொள்கின்றது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harshitha Samarawickrama | b Nattaya Boochatham | 81 | 69 | 10 | 0 | 117.39 |
Chamari Athapaththu | c Nannapat Koncharoenkai b Suleeporn Laomi | 12 | 18 | 1 | 0 | 66.67 |
Hasini Perera | run out (Naruemol Chaiwai) | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Nilakshi de Silva | not out | 39 | 21 | 3 | 2 | 185.71 |
Oshadi Ranasinghe | b Thipatcha Putthawong | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Kaushani Nuthyangana | b Thipatcha Putthawong | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Anushka Sanjeewani | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 15 (b 1 , lb 2 , nb 1, w 11, pen 0) |
Total | 156/5 (20 Overs, RR: 7.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nattaya Boochatham | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Chanida Sutthiruang | 3 | 0 | 27 | 0 | 9.00 | |
Thipatcha Putthawong | 4 | 0 | 26 | 2 | 6.50 | |
Phannita Maya | 1 | 0 | 12 | 0 | 12.00 | |
Sornnarin Tippoch | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Suleeporn Laomi | 2 | 0 | 15 | 1 | 7.50 | |
Onnicha Kamchomphu | 4 | 0 | 25 | 0 | 6.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nannapat Koncharoenkai | lbw b Inoka Ranaweera | 25 | 21 | 4 | 0 | 119.05 |
Natthakan Chantham | b Achini Kulasuriya | 7 | 12 | 0 | 0 | 58.33 |
Naruemol Chaiwai | b Kavisha Dilhari | 19 | 25 | 1 | 1 | 76.00 |
Chanida Sutthiruang | not out | 37 | 42 | 3 | 0 | 88.10 |
Sornnarin Tippoch | b Sugandika Kumari | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Phannita Maya | b Achini Kulasuriya | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Rosenan Kanoh | not out | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Extras | 8 (b 1 , lb 0 , nb 0, w 7, pen 0) |
Total | 107/5 (20 Overs, RR: 5.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 4 | 0 | 14 | 1 | 3.50 | |
Oshadi Ranasinghe | 3 | 0 | 28 | 0 | 9.33 | |
Achini Kulasuriya | 3 | 0 | 19 | 2 | 6.33 | |
Inoka Ranaweera | 4 | 0 | 19 | 1 | 4.75 | |
Kavisha Dilhari | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Chamari Athapaththu | 2 | 0 | 6 | 0 | 3.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<