மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரின் இறுதி குழுநிலைப் போட்டியில் இன்று (11) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
பங்களாதேஷில் பந்துவீச்சில் மிரட்டி இலங்கை மகளிர் வெற்றி
இந்த தொடரில் தாம் விளையாடிய இறுதி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தொடரின் இறுதி குழுநிலைப் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டிருந்தது.
சில்லேட் நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியினர் 18.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை எடுத்தனர்.
இலங்கை மகளிர் அணி துடுப்பாட்டத்தில் சாமரி அத்தபத்து 26 பந்துகளில் 9 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒசதி ரணசிங்க 26 ஓட்டங்களைப் எடுத்திருந்தார்.
மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சு சார்பில் ஒமைமா சொஹல் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டியுபா ஹொசைன் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 113 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 18.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கை 113 ஓட்டங்களுடன் அடைந்தது.
பாகிஸ்தான் மகளிர் அணியின் வெற்றியை உறுதி செய்ய காரணமாக இருந்த நிதா தர் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்திருந்தார்.
உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.
இப்போட்டியில் தோல்வியடைந்த போதும் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கும் இலங்கை, அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் எதிர்வரும் வியாழன் (13) எதிர்கொள்ளவுள்ளதோடு, மற்றைய அரையிறுதியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்தை எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | c Nida Dar b Tuba Hassan | 41 | 26 | 9 | 0 | 157.69 |
Harshitha Samarawickrama | c Omaima Sohail b Nida Dar | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Hasini Perera | c & b Omaima Sohail | 18 | 18 | 2 | 0 | 100.00 |
Nilakshi de Silva | c Aiman Anwer b Omaima Sohail | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Kavisha Dilhari | lbw b Omaima Sohail | 11 | 13 | 1 | 0 | 84.62 |
Anushka Sanjeewani | lbw b Omaima Sohail | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Malsha Shehani | b Omaima Sohail | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Oshadi Ranasinghe | lbw b Tuba Hassan | 26 | 29 | 3 | 0 | 89.66 |
Sugandika Kumari | run out (Bismah Maroof) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Inoka Ranaweera | run out (Sadia Iqbal) | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Achini Kulasuriya | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Extras | 10 (b 4 , lb 0 , nb 1, w 5, pen 0) |
Total | 112/10 (18.5 Overs, RR: 5.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sadia Iqbal | 4 | 0 | 16 | 0 | 4.00 | |
Aiman Anwer | 3 | 0 | 28 | 0 | 9.33 | |
Nida Dar | 4 | 0 | 25 | 1 | 6.25 | |
Tuba Hassan | 3.5 | 0 | 26 | 2 | 7.43 | |
Omaima Sohail | 4 | 0 | 13 | 5 | 3.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Muneeba Ali | c Sugandika Kumari b Achini Kulasuriya | 10 | 16 | 1 | 0 | 62.50 |
Sidra Ameen | c Chamari Athapaththu b Oshadi Ranasinghe | 13 | 13 | 2 | 0 | 100.00 |
Bismah Maroof | c Harshitha Madavi b Inoka Ranaweera | 13 | 15 | 1 | 0 | 86.67 |
Omaima Sohail | lbw b Kavisha Dilhari | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Nida Dar | not out | 26 | 28 | 1 | 0 | 92.86 |
Aliya Riaz | c & b Kavisha Dilhari | 20 | 26 | 3 | 0 | 76.92 |
Ayesha Nasem | not out | 16 | 5 | 0 | 2 | 320.00 |
Extras | 8 (b 1 , lb 4 , nb 0, w 3, pen 0) |
Total | 113/5 (18.5 Overs, RR: 6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Oshadi Ranasinghe | 3 | 0 | 16 | 1 | 5.33 | |
Achini Kulasuriya | 3.5 | 0 | 32 | 1 | 9.14 | |
Inoka Ranaweera | 4 | 0 | 12 | 1 | 3.00 | |
Kavisha Dilhari | 3 | 0 | 16 | 2 | 5.33 | |
Malsha Shehani | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Chamari Athapaththu | 1 | 0 | 12 | 0 | 12.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<