மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையில் நடைபெற்ற போட்டியில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷினை 03 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> மேஜர் பிரீமியர் லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெதிவ்ஸ், திக்வெல்ல
மேலும் இந்த வெற்றி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆசியக் கிண்ண T20 தொடரில் கிடைத்த நான்காவது தொடர் வெற்றியாக அமைவதோடு, இலங்கை மகளிர் அணி இந்த வெற்றியுடன் ஆசியக் கிண்ண T20 தொடரின் அரையிறுதியில் விளையாடுவதனையும் உறுதி செய்திருக்கின்றது.
இரு அணிகளும் மோதியிருந்த இந்தப் போட்டி பங்களாதேஷின் சில்லேட் அரங்கில் இன்று (10) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டு போட்டியின் முதல் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மழையின் குறுக்கீடு ஏற்பட்ட போது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 31 பந்துகளை எதிர்கொண்டு 2 பௌண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறுமுனையில் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ருமானா அஹ்மட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, பஹ்மா கட்டூன், சஞ்சிதா அக்தர் மற்றும் ஜஹன்ரா அலம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> இலங்கையின் முதல் பயிற்சிப் போட்டி ஒத்திவைப்பு
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக டக்வெத் லூயிஸ் முறையில் 7 ஓவர்களுக்கு 41 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கிற்காக சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருந்தது.
பின்னர் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இறுதி இரண்டு ஓவர்களிலும் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டு 8 விக்கெட்டுக்கள் மீதமிருந்த போதும் அவ்வணி இலங்கை வீராங்கனைகளின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 7 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசிய இனோக்கா ரணவீர வெறும் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ஒசதி ரணசிங்கவும் ஒரு விக்கெட்டுடன் இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்டநாயகி விருதும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை இனோக்கா ரணவீரவிற்கு வழங்கப்பட்டது. இனி ஆசியக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தில் தமது இறுதி குழுநிலை மோதலில் நாளை (11) பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது .
போட்டியின் ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harshitha Samarawickrama | c Nigar Sultana b Sanjida Akter Meghla | 18 | 31 | 2 | 0 | 58.06 |
Chamari Athapaththu | b Salma Khatun | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Anushka Sanjeewani | c Murshida Khatun b Rumana Ahmed | 8 | 13 | 0 | 0 | 61.54 |
Hasini Perera | c Sobhana Mostary b Fahima Khatun | 11 | 17 | 0 | 0 | 64.71 |
Nilakshi de Silva | not out | 28 | 31 | 2 | 0 | 90.32 |
Kavisha Dilhari | c Sobhana Mostary b Rumana Ahmed | 11 | 10 | 1 | 0 | 110.00 |
Oshadi Ranasinghe | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 83/5 (18.1 Overs, RR: 4.57) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Salma Khatun | 3 | 0 | 9 | 0 | 3.00 | |
Jahanara Alam | 3.1 | 0 | 17 | 1 | 5.48 | |
Shohely Akhter | 2 | 0 | 9 | 0 | 4.50 | |
Sanjida Akter Meghla | 4 | 0 | 13 | 1 | 3.25 | |
Rumana Ahmed | 3 | 0 | 14 | 2 | 4.67 | |
Fahima Khatun | 3 | 0 | 16 | 1 | 5.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Fargana Hoque Pinky | st Anushka Sanjeewani b Inoka Ranaweera | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Murshida Khatun | st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Nigar Sultana | c Anushka Sanjeewani b Inoka Ranaweera | 12 | 11 | 1 | 0 | 109.09 |
Rumana Ahmed | c Nilakshi de Silva b Inoka Ranaweera | 8 | 9 | 0 | 0 | 88.89 |
Shohely Akhter | c Nilakshi de Silva b Inoka Ranaweera | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Mst Ritu Moni | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Fahima Khatun | run out (Anushka Sanjeewani) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Salma Khatun | run out (Malsha Shehani) | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Jahanara Alam | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 37/7 (7 Overs, RR: 5.29) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 2 | 0 | 9 | 0 | 4.50 | |
Oshadi Ranasinghe | 2 | 0 | 13 | 1 | 6.50 | |
Inoka Ranaweera | 2 | 0 | 7 | 4 | 3.50 | |
Kavisha Dilhari | 1 | 0 | 6 | 0 | 6.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<