மகளிர் ஐ.பி.எல். தொடரில் ஒரே அணியில் இலங்கை மங்கைகள்

347
(Photo by Jenny Evans/Getty Images)

எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 09ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மகளிர் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 தொடருக்கான அணிகளின் விபரம் இன்று (11) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சுனில் நரேனின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு

மகளிர் T20 சவால் கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் மகளிர் ஐ.பி.எல். தொடர் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெறவிருப்பதோடு, இந்த தொடரில் கடந்த ஆண்டினைப் போன்று இம்முறையும் மூன்று அணிகள் பங்குபெறவிருக்கின்றன.

இதேநேரம், வெளியாகியிருக்கும் அணி விபரங்களின் அடிப்படையில் சுபர்நோவாஸ் அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இலங்கையின் சஷிகலா சிறிவர்தன மற்றும் சமரி அத்தபத்து ஆகிய இரு வீராங்கனைகள் பெற்றிருக்கின்றனர். இந்த இரு வீராங்கனைகளும் விளையாடுகின்ற சுபர் நோவாஸ் அணியின் தலைவியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்பிரீட் கெளர் செயற்படவிருக்கின்றார்.

மறுமுனையில், சுபர்நோவாஸ் அணியில் காணப்படும் ஏனைய வெளிநாட்டு வீராங்கனைகளாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகேரா சல்மானும், தென்னாபிரிக்க அணியின் அயபொங்கா கோங்காவும் இருக்கின்றனர்.

இதேவேளை, தொடரில் விளையாடுகின்ற ஏனைய அணிகளில் ஒன்றான ட்ரைல்ப்ளேசர்ஸ் அணியின் தலைவியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிரிதி மன்தனா செயற்பட, மிதாலி ராஜ் வெலோசிட்டி அணியின் தலைவர் பொறுப்பினை ஏற்றிருக்கின்றார்.

இதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலோசிட்டி அணிக் குழாத்தில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட், தென்னாபிரிக்க மகளிர் அணியின் சுனே லூஸ், பங்களாதேஷ் வீராங்கனை ஜஹானரா ஆலம் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

அதேநேரம், மந்தனா தலைமையிலான ட்ரைல்ப்ளேசர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகளின் டீன்ட்ரா டொட்டின், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் வெளிநாட்டு வீராங்கனைகளாக இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த மாதம் 25ஆம் திகதி மகளிர் வீராங்கனைகளுக்கான பிக்பேஷ் லீக் T20 தொடர் ஆரம்பமாகவிருப்பதால், அவுஸ்திரேலிய வீராங்கனைகள் யாரும் இந்த மகளிர் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகளின் விபரம்

சுபர்நோவாஸ் 

ஹர்மன்ப்ரீட் கவுர் (அணித்தலைவி), ஜெமிமா ரொட்ரிக்ஸ், சாமரி அத்தபத்து, ப்ரீயா பூனியா, அனுஜா பாட்டில், ராதா யாதவ், டானியா பாட்டியா, சஷிகலா சிறிவர்த்தன, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ர்ரகர், ஆயூஷி சோனி, அயபோங்கா காக்கா, முஸ்கான் மலீக்

ட்ரைல்பிளேசர்ஸ் 

ஸ்மிரிதி மன்தனா (அணித்தலைவி), தீப்தி சர்மா, பூனம் ராவட், ரிச்சா கோஸ், டி. ஹேமலதா, நுஸ்ஹத் பர்வீன், ராஜேஸ்வரி கய்க்வாட், ஹர்லீன் டியோல், ஜூலான் கோஸ்வாமி, சிமரன் டில் பஹதூர், சோபி எக்லெஸ்டோன், நட்டக்கன் சன்தம், டீன்ட்ரா டொட்டின், கஸ்வி கெளதம்

வெலோசிட்டி 

மிதாலி ராஜ், வேதா கிரிஷ்னமூர்த்தி, ஷபாலி வெர்மா, சுஷ்மா வெர்மா, எக்தா பிஸ்ட், மான்ஸி ஜோஷி, சிக்கா பாண்டே, டேவிக்கா வைத்யா, சுஷிரி திப்யதர்ஷினி, மனாலி தக்ஷினி, லெக் கஷ்பெரேக், டேனியல் வியாட், சுனே லூஸ், ஜஹனாரா ஆலம், எம். அனாகா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<