விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு

234
Ben Stokes
Ben Stokes

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.  

கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும்விஸ்டன்இதழ் வருடந்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கௌரவிக்கும். அந்த வகையில் 2019-2020 பருவகாலத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் இம்முறை இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“இங்கிலாந்து தொடர் நிறுத்தப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது” – மிக்கி ஆர்தர்

இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்…

கடந்த வருடம் இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இவர், ஆஷஸ் தொடரை சமநிலையில் முடிப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை (82 ஓட்டங்கள்), அவுஸ்திரேலியா (89 ஓட்டங்கள்), இந்தியா (79 ஓட்டங்கள்), நியுஸிலாந்து (இறுதிப் போட்டி 84* ஓட்டங்கள்) மற்றும் சுப்பர் ஓவர் (15 ஓட்டங்கள்) என நான்கு அரைச் சதங்களை குவித்த பென் ஸ்டோக்ஸ், பல போட்டிகளில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்

இதனையடுத்து நடைபெற்ற ஆஷஸ் தொடரில் எட்பெஸ்டனில் 50 ஓட்டங்களையும், லோர்ட்ஸில் 100 ஓட்டங்களையும் குவித்த அவர், ஹெடிங்லியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களை குவித்தார்

இதனடிப்படையில் 28 வயதான பென் ஸ்டோக்ஸை விஸ்டன் சஞ்சிகை ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது.

இதற்கிடையில் விஸ்டன் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த விராட் கோஹ்லியின் மூன்று வருடகால ஆதிக்கத்துக்கு பென் ஸ்டோக்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரரான அன்ட்ரூ பிளின்டாப் 2005ஆம் ஆண்டு சிறந்த விஸ்டன் விருதை வென்றிருந்தார்அதன்பிறகு 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து வீரரொருவர் முதல்தடவையாக இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், வருடத்தின் சிறந்த வீரராக பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டமை குறித்து விஸ்டன் ஆசிரியர் லோரன்ஸ் பூத் கருத்து தெரிவிக்கையில், “பென் ஸ்டோக்ஸ் சில வார இடைவேளையில் வாழ்நாள் திறமையை வெளிப்படுத்தினார்

முதலில் சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்ளை எடுக்க உதவுவதற்கு முன்பு, திறமை மற்றும் நல்ல அதிஷ்டம் ஆகியவற்றின் கலவையுடன், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரன்சேஸை மீட்டார்.

ஐ.பி.எல் விளையாட கோஹ்லியை ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சும் ஆஸி வீரர்கள்

ஐ.பி.எல் ஒப்பந்தங்களை பாதுகாத்து அந்தத் தொடரில் விளையாடுவதற்காக விராத்…

பின்னர், ஹெடிங்லியில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில், அவர் ஒரு சிறந்த இன்னிங்ஸை உருவாக்கினார். ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட் வெற்றியை இங்கிலாந்துக்கு பெற்றுக் கொடுத்தார்.  

எனவே சிவப்பு பந்து அல்லது வெள்ளை பந்துகளில் அவர் சிறந்து விளங்கக் கூடியவர” என அவர் தெரிவித்தார்.  

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரை வீசிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், விஸ்டனின் ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார்

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இணையும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீர…

ஆர்ச்சருடன் அவுஸ்திரேலிய வீரர்களான பெட் கம்மின்ஸ், மார்னஸ் லபுசேன் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர், அதேபோல தென்னாப்பிரிக்காவில் பிறந்த எசெக்ஸ் கழகத்தைச் சேர்ந்த சைமன் ஹார்மரும் இந்த வீரர்களில் இடம்பெற்றுள்ளார்

வருடத்தின் அதிசிறந்த டி20 வீரருக்கான விஸ்டன் விருதை மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரூ ரஸல்ஸ் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<