மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியிலும் 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் 3-0 எனும் அடிப்படையில் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணி கைப்பற்றியது.
மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்தில சொதப்பிய இலங்கை மகளிர் அணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை…
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை வீராங்கனைகள் தொடரை இழந்த நிலையில், இந்தப் போட்டியையாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் ஆடினர்.
ப்ரையன் லாரா கிரிக்கெட் நிறுவன மைதானத்தில் பகல் நேர ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக சற்று தாமதித்தே ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட ஸ்டெப்னி டெய்லர் 55 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஹெய்லி மெதிவ்ஸ் 41 ஓட்டங்களையும் மெரிசா அகயுல்லேரியா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணியின் சசிகலா சிறிவர்தன 3 விக்கெட்டுக்களையும் இனோகா ரணவீர 2 விக்கெட்டுக்களையும் சிரிபாளி வீரக்கொடி, சந்திமா குணரத்ன மற்றும் ஹன்சிமா கருணாரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.
பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை மகளிர் அணி துடுப்பாட்டத்தில் சோபிக்க முடியாத காரணத்தினால் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் டிலானி மனோதரா 42 ஓட்டங்களையும் ரெபேக்கா வெண்டோர்ட் 36 ஓட்டங்களையும் யசோதா மென்டிஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்டெப்னி டெய்லர் மற்றும் சகிரா செல்மன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹெய்லி மெதிவ்ஸ் மற்றும் ஆபி ப்ளச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிய இலங்கை A அணி
மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது உத்தியோகபூர்வமற்ற நான்கு…
துடுப்பாட்டத்தில் 55 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஸ்டெப்னி டெய்லர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி – 182/8 (45) ஸ்டெப்னி டெய்லர் 55, ஹெய்லி மெதிவ்ஸ் 41, மெரிசா அகயுல்லேரியா 37, சசிகலா சிறிவர்தன 3/26, இனோகா ரணவீர 2/24
இலங்கை மகளிர் அணி – 142/10 (40.4) டிலானி மனோதரா 42, ரெபேக்கா வேண்டோர்ட் 36, யசோதா மென்டிஸ் 18, ஸ்டெப்னி டெய்லர் 3/29, சகிரா செல்மன் 3/32