ஜேசன் ரோய் மற்றும் ஜோ ரூட்டின் சதங்களின் மூலம் தனது ஆதிகூடிய வெற்றி இலக்கை எட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிறிஸ் கெயில்
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட …..
பார்படோஸ், கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற போட்டியில் 361 ஓட்ட வெற்றி இலக்கை விரட்டிய இங்கிலாது அணியின் ரோய் 85 பந்துகளில் 123 ஓட்டங்களையும் ரூட் 97 பந்துகளில் 102 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் அவ்வணி எட்டு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
ஓட்டம் சமநிலை பெற்றபோது ரூட் ஆட்டமிழந்த நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் 65 ஓட்டங்களை எடுத்த இயன் மோர்கன் இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
முன்னதாக கிறிஸ் கெயில் பெற்ற 135 ஓட்டங்கள் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 360 ஓட்டங்களை விளாசியது.
இதில் கிறிஸ் கெயில் மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசியதோடு மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மொத்தமாக 23 சிக்ஸர்களை பெற்று ஒருநாள் இன்னிங்ஸில் அணி ஒன்று பெற்ற அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடித்தனர். அத்துடன் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து அணிfளுக்கு எதிராக பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் இது இருந்தது.
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மூன்று மாற்றங்கள்
இங்கிலாந்துடனான ஒருநாள் தொடருக்காக …..
ஒருநாள் போட்டிகளில் வேறு எந்த வீரரை விடவும் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராகவும் கெயில் உள்ளார். அவர் தனது 514 இன்னிங்ஸ்களில் 488 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையிலேயே கெயில் தனது அதரடி சதத்தை பெற்றார்.
எனினும், கெயில் ஒன்பது ஓட்டங்களுடன் இருந்தபோது அவரது பிடியெடுப்பொன்றை ரோய் தவறவிட்டார்.
இதற்கு முன்னர் டிரன்ட் பிரிஜில் 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்து 350 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்த தனது சாதனையை இங்கிலாந்தால் இந்த போட்டியில் முறியடிக்க முடிந்தது.
அத்துடன் ஒருநாள் சர்வதேச போட்டி வரலாற்றில் நான்காவது அதிகூடிய வெற்றி இலக்கை எட்டிய சந்தர்ப்பமாகவும் இது இருந்தது.
Photo Album : Moors SC v Panadura SC – Major T20 Tournament 2018/19
துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளின் மோசமான களத்தடுப்பும் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியது. ரூட் மற்றும் ரோய் இருவரது இரண்டு பிடியெடுப்புகளை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தவறவிட்டனர்.
ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம் நாளை (22) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியில் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் – 360/8 (50) – கிறிஸ் கெயில் 135, ஷாய் ஹோப் 64, ட்ரென் பிராவோ 40, பென் ஸ்டொக்ஸ் 3/37, ஆதில் ரஷீத் 3/74
இங்கிலாந்து – 364/4 (48.4) – ஜேசன் ரோய் 124, ஜோ ரூட் 102, இயின் மோர்கன் 65, ஜேசன் ஹோல்டர் 2/63
முடிவு – இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<