தமிமின் சதத்துடன் பங்களாதேஷுக்கு தொடரின் முதல் வெற்றி

260

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில்  பங்களாதேஷ் அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று (22) மேற்கிந்திய தீவுகளின் ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மே.தீவுகள் ஒரு நாள் குழாத்தில் ரசல்

பங்களாதேஷ் அணிக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி …

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இரண்டாவது ஓவரிலே தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அனாமுல் ஹக் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து அனுபவம் மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 207 என்ற மிகப் பெரிய ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இது பங்களாதேஷ் அணி சார்பாக பெறப்பட்ட இரண்டாவது இரட்டை சத இணைப்பாட்டமாகும். மேலும், ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெறப்பட்ட அதி கூடிய இணைப்பாட்டமும் இதுவாகும்.

ஷகிப் அல் ஹசன் 3 ஓட்டங்களால் சதம் பெறும் வாய்ப்பை இழந்து 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தமீம் இக்பால் தனது 10ஆவது ஒரு நாள் சர்வதேச  சதத்தை பூர்த்தி செய்து 130 ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும் முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக 11 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியாக, 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது பங்களாதேஷ் அணி. பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக தேவேந்திரா பிசூ இரண்டு விக்கெட்டுகளையும் அன்ரோ ரசல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே உடனான தொடரை வைட்-வொஷ் செய்த பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ சர்வதேச …

பின்னர் 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இழக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 48 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சிமோன் ஹிட்மயர் 52 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் 40 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக அணித் தலைவர் மஷ்ரபி மொர்டசா நான்கு விக்கெட்டுகளையும் முஸ்தபிசுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியில் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 130 ஓட்டங்களைப் பெற்ற தமீம் இக்பால் தெரிவு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் அணி279/4 (50) தமீம் இக்பால் 130*, ஷகிப் அல் ஹசன் 97, முஷ்பிகுர் ரஹீம் 30  தேவேந்திரா பிசூ 52/2

மேற்கத்திய தீவுகள் அணி231/9 (50) சிமோன் ஹிட்மயர் 52, கிறிஸ் கெய்ல் 40, மஷ்ரபி மொர்டசா 37/4, முஸ்தபிசுர் ரஹ்மான் 35/2

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…