ஆக்கம் – S.டெனிக்சன்
பல சுவாரஷ்யமான ஆட்டங்களுக்கு சொந்தக்கார அணி
ரசிகர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பை கொடுக்கும் அணி
பல ஆட்டங்களை இறுதி ஓவர் வரை கொண்டு சென்ற அணி
தோற்று விடுவோம் என நாம் எதிர்பார்த்த ஆட்டங்களை,
சற்றும் எதிர்பாராத வண்ணம் வென்று,
சந்தோசத்தின் உச்சத்தில் ரசிகர்களை ஆழ்தும் ஒரே ஒரு அணி
இந்தியாவின் ஓர் மாநிலத்தை விட குறுகிய பரப்பைக் கொண்ட எம் தேசம்
எனினும்,
50 ஓவர்கள், T-20 உலகக் கிண்ணங்களை,
கிரிக்கெட்டின் ஜாம்பவான்களே வெல்லாத போதும்
அனைத்து வகை உலகக் கிண்ணங்களையும் வென்று காட்டிய தேசம்
அவற்றை ரசிகர்களுக்காகவே வென்று அசத்திய ஒரே தேசம்
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று ஆட்டத்தை ஊகிக்க முடியாத அணி
பல முக்கிய நட்சத்திர வீரர்களை வளர்த்தெடுத்த அணி
எண்ணில் அடங்கா சாதனைகளை படைத்த அணி
கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறவாத அணி
சுழல் ஜாம்பவான் முரளிதரன் தொடக்கம்
அதிரடி நாயகன் சனத்,
இடக்கை நட்சத்திரம் சங்கா,
உலகக் கிண்ண வெற்றி நாயகன் ரணதுங்க,
அமைதி ஆட்ட நாயகன் சில்வா,
அதிக வெற்றிகளின் சொந்தக்காரன் மஹேல,
வேகத்தின் நாயகர்கள் வாஸ் மற்றும் மலிங்க,
டில்ஸ்கூப் மன்னன் டில்ஷான்
தடுப்புச் சுவரான அத்தபத்து வரை
பல வீரர்களை வளர்த்தெடுத்த அணி…..
1996 உலக கிண்ணம் தொடக்கம்
2007 இங்கிலாந்துடனான ஆட்டம்
ஆசிய கிண்ண மெண்டிஸின் மாய சுழல் ஆட்டம்
2014 T-20 உலகக் கிண்ண ஆட்டம்
T-20 யில் நியூஸிலாந்திற்கு எதிரான ஹேரத்தின் பந்து வீச்சு
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மாலிங்க, மெதிவ்சின் இணைப்பாட்டம்
2016 T-20 யில் அசேலவின் அதிரடி
இறுதிப் பந்திற்கு முன்னைய பந்தில் இங்கிலாந்துடனான டெஸ்ட் வெற்றி
என எண்ணில் அடங்கா இறுதி நேர போராட்ட வெற்றிகளை சுவைத்த அணி
இவ்வாறிருந்தும்,
வெல்ல வேண்டிய பல ஆட்டங்களில்
வெற்றியைத் தவறவிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அணி
தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறும் எமது அணிக்கு
ரசிகர்களான எமது ஆதரவு என்றும் இருக்கும்
வெற்றி என்பது நிரந்தரம் அல்ல
தோல்வி என்பதும் நிரந்தரம் அல்ல
என்றோ ஒருநாள் மீண்டு எழும் வரை
என்றும் இருப்போம் இலங்கை ரசிகனாக………
தோத்தாலோ ஜெயிச்சாலோ மீசைய முறுக்கு
இலங்கையன் என்று……