நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களுடன் தனது 29ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் ……
இந்த நிலையில், இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நேற்று (08) கட்டுநாயக்கவில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த வேளை, நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டிருந்துது.
இதில் தேநீர் இடைவேளையின் போது கேன் வில்லியம்சன் இலங்கை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று கேக் வெட்டி தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
கேன் வில்லியம்சனின் இந்த செயலானது ஒருபுறத்தில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருந்ததுடன், மறுபுறத்தில் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் வைத்து கேன் வில்லியம்சன் போன்ற முன்னணி வீரரொவருக்கு கேக் கொடுத்து சந்தோஷப்படுத்தி இருந்ததற்கு முழு உலகிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<