டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற பெருமையை நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் ஒன்றினை பதிவுசெய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.
>> தென்னாபிரிக்காவின் கன்னி கிரிக்கெட் உலகக் கிண்ண கனவு கலைந்தது
முன்னாள் வீரரான ரொஸ் டெய்லர் 196 இன்னிங்ஸ்களில் 7683 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்களை பெற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
எனினும் இந்த சாதனையை கேன் வில்லியம்சன் 161 இன்னிங்ஸ்களில் கடந்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக இவர் 53.33 என்ற அதிகூடிய சராசரியுடன் (குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள்) 7787 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மண்ணில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றுக்கொண்டார். ரொஸ் டெய்லர் இதற்கு முதல் 87 இன்னிங்ஸ்களில் 3905 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், கேன் வில்லியம்சன் 70 இன்னிங்ஸ்களில் 3930 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
கேன் வில்லியம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 132 ஓட்டங்களை பெற்றதுடன், நியூசிலாந்து அணி போலவ் ஒன் முறையில் 483 ஓட்டங்களை பெற்று, 258 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<