திறமை அடிப்படையிலே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு – மஹேல

1028
Arjun Tendulkar

திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தமது அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

144ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஏலத்தில் கடைசி வீரராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய, முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் வாசிக்கப்பட்டது.

>> இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ்

இவரது ஏலத்தொகையாக 20 இலட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் அடிப்படை விலைக்கே மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுனை ஏலத்தில் எடுத்தது

இதனிடையே, .பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வானது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது

சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் தான் அர்ஜுன் டெண்டுல்கருக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிட்டதாக ஒரு சாராரும், பிரபலத்தின் மகன் என்பதால் அவருக்கு எந்த நல்லதுமே நடக்க கூடாது என்று கூறுவது சரியல்ல என்று சிலரும் கூறி வருவதால் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது

இந்நிலையில், திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

>> Video – மீண்டும் கிரிக்கெட் களத்தில் Russel, Kulasekara & Dhammika…! | Sports Roundup – Epi 149

இதுதொடர்பாக, மஹேல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், உண்மையில் அர்ஜுன் அணியில் இணைவது நல்லதுதான். வலைப் பயிற்சியில் கடுமையாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் உழைத்தார். குறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் கடினமாக உழைத்தார். வலைப் பயிற்சியில் எமது அணி வீரர்களுக்கு அயராமல் பந்துவீசினார்.

எனவே, இம்முறை ஏலத்தில் நாங்கள் முற்றிலும் திறமையின் அடிப்படையில் மட்டுமே இதை அணுகினோம். ஏனெனில், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. அதிஷ்டவசமாக அவர் (அர்ஜுன்) பந்துவீச்சாளாராக உள்ளார்.  

எனவே அர்ஜுனைப் போல பந்துவீச முடிந்தால் சச்சின் மிகவும் பெருமைப்படுவார் என்று நான் நினைக்கிறேன். அர்ஜுனுக்கு ஒரு கற்றல் நடைமுறையாகவே  இருக்கப்போகிறது என நான் நினைக்கிறேன்

அவர் இளம் வீரர் என்பதால் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, அவருக்கு நாம் உரிய நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு அதிகமான அழுத்தங்களை கொடுக்கக் கூடாது” என தெரிவித்தார்.

>> அபார சதங்களால் மைதானத்தை அலங்கரித்த மெதிவ்ஸ், சந்திமால்

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலொசகர்களில் ஒருவரான சஹீர் கான் கூறும்போது

”அர்ஜுனின் பந்துவீச்சைப் பார்த்திருக்கிறேன், அபாரத் திறமையுடையவர். அவருக்கு சில நுணுக்கங்களை ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளேன். அவர் ஒரு கடின உழைப்பாளி, கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர் என்பதால் ஏலத்தில் தேர்வு செய்தோம்.

அதேபோல, சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற ஒரு பெரிய அழுத்தம் அவர் மீது ஏற்படும். இதை அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் அர்ஜுனுக்கு உதவிக்கரமாகவே இருக்கும்” என குறிப்பிட்டார்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<