மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் வெற்றியாளர்கள் விபரம்

433

கல்வி திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நேற்றைய தினம் நிறைவு பெற்றன.

கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள்

கடந்த வார இறுதியில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெ ற்ற..

கடந்த 19ஆம் திகதியில் இருந்து (திங்கட்கிழமை) தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டிகளில், ஏற்கனவே இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகிய பாடசாலை வீர வீராங்கனைகள் பங்குகொண்டனர்.

மாகாண மட்டத்திலான ஏனைய அனைத்துவிதப் போட்டிகளும் முன்னதாகவே நிறைவு பெற்றிருந்த நிலையில், இறுதியாகவே இந்த தடகளப் போட்டிகள் இடம்பெற்றன.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக இந்தப் போட்டிகள் அனைத்தும் முறையே 12, 14, 16, 18 மற்றும்  20 வயதின் கீழ் என ஐந்து பிரிவுகளில் நடாத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக, இதற்கு முன்னர் பதிவாகிய போட்டிச் சாதனைகள் இந்த போட்டிகளுக்கு உள்வாங்கப்படவில்லை. மாறாக இம்முறை புதிய முறையில் முதல் முறையாக இடம்பெறுவதனால் அனைத்து சிறந்த பெறுதிகளும் புதிய சாதனையாகக் கருதப்பட்டன.

கடந்த வருடங்களில் நடைபெற்ற போட்டிகள் 13, 15, 17, 19 மற்றும் 21  வயதின் கீழ் பிரிவுகளிலேயே நடைபெற்றன. எனினும் சர்வதேச மட்டத்தில் 12, 14, 16, 18 மற்றும்  20 வயதின் கீழ் என்ற முறையில் போட்டிகள் இடம்பெறுவதனாலேயே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கை முறை பற்றி கருத்து தெரிவித்த கல்வித் திணைக்களத்தின் கல்வி மற்றும் விளையாட்டு உதவிப் பணிப்பாளர் திருமதி எல். ஏ. டி. தமிக்கா குலதுங்க, சர்வதேச மட்டப் போட்டிகளுக்கு எமது வீரர்களை சிறந்த முறையில் தயார்படுத்தும் நோக்குடனேயே இந்த முறைமைக்கு  போட்டிகளின் வயதெல்லை மாற்றப்பட்டுள்ளன என்றார்.

கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட்..

போட்டிகளின் நிறைவு விழா மேல் மாகாண உதவி ஆளுநர், திரு. கே.சி. லோகேஸ்வரன், மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச மற்றும் பல சிறப்பு விருந்தினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன. இதன்போது, இசையுடன் கூடிய சிறுவர்களின் நடனம் மற்றும் பல பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் தெரிவாகிய சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள்

வயது பிரிவு பெயர் பாடசாலை போட்டி திறமை
U16 ஆடவர் I. W. தேவிந்து பிரதீப் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி நீளம் பாய்தல் 6.53 மீட்டர்
U16 மகளிர் சந்தீப ஹென்டர்சன் கேட்வே சர்வதேச பாடசாலை நீளம் பாய்தல் 5.37 மீட்டர்
U18 ஆடவர் ஷேஹன் காரியவசம் புனித.ஜோசப் கல்லூரி 110 மீட்டர் தடை தாண்டல் 14.00 வினாடிகள்
U18 மகளிர் சஜினி திவ்யாஞ்சலி லைசியம் சர்வதேசப் பாடசாலை 200 மீட்டர் 25.4 வினாடிகள்
U20 ஆடவர் H.உஷான் பெரேரா மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி உயரம் பாய்தல் 2.15 மீட்டர்
U20 மகளிர் பூர்ணிமா குணரத்ன லீட்ஸ் சர்வதேச பாடசாலை நீளம் பாய்தல் 5.66 மீட்டர்

புனித பெனடிக்ட் மற்றும் மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரிகளுக்கிடையிலான கடும் போட்டிக்கு மத்தியில், ஆடவர் பிரிவு போட்டிகளில் 200 புள்ளிகளை பெற்று புனித பெனடிக்ட் கல்லூரி முதலிடம் பெற்றது. மகளிர் பிரிவில், வத்தளை, லைசியம் சர்வதேசப்  பாடசாலை 157 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றிய அதேநேரம், நீர்கொழும்பு ஆவே மரியாள் கல்லூரி இரண்டாம் இடத்தை பதிவு செய்தது.

மேல் மாகாண பாடசாலை விளையாட்டு விழாவில், கொழும்பு கல்வி வலயம்  மொத்தமாக 1,365 புள்ளிகளைப் பெற்று மேல் மாகாணத்தின் சிறந்த விளையாட்டு வலயமாக மகுடம் சூடியது. அதேநேரம், நீர்கொழும்பு கல்வி வலயம்  மொத்தமாக 745 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பதிவு செய்தது.

பரிசளிப்பு நிகழ்வுகள் முழுமையாக இடம்பெற்று முடிந்ததும், 2017ஆம் ஆண்டுக்கான மேல் மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா மேல் மாகாண கொடியிறக்கத்துடன் உத்தியோகபூர்வமாக நிறைவுற்றது.