Home Tamil மேற்கிந்திய தீவுகள் T20I தொடரினை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

மேற்கிந்திய தீவுகள் T20I தொடரினை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி

West tour of Sri Lanka 2024 

78
West tour of Sri Lanka 2024 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

மேலும் இலங்கை கிரிக்கெட் அணி தொடர் வெற்றியுடன் வரலாற்றில் முதல் தடவையாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இருதரப்பு T20I தொடர் வெற்றி ஒன்றினையும் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>லங்கா T10 லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான T20I போட்டி முன்னதாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ரொவ்மன் பவல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவர்களுக்காக பெற்றார்.

அதன்படி இரு அணிகளுக்கும் தொடரினை தீர்மானிக்க காரணமாக அமைந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தினை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் இலங்கையின் சுழலுக்கு தடுமாறினர்.

தொடர்ந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியானது ஒரு கட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது அவ்வணிக்கு அணித்தலைவர் ரொவ்மன் பவல் மற்றும் குடாகேஷ் மோட்டி ஆகியோர் சற்று ஆறுதல் அளித்தனர்.

பின்னர் இந்த வீரர்களின் ஆட்டத்தோடு மேற்கிந்திய தீவுகள் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரொவ்மன் பவல் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுக்க, குடாகேஷ் மோட்டி 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஸன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க நுவான் துஷார, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.

>>கோல் மார்வல்ஸ் அணியில் இணையும் சகீப் அல் ஹஸன்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க சிறந்த அதிரடி ஆரம்பத்தினை வழங்கினார்.

பின்னர் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட் அவர் 22 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிபோனது.

பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் குசல் பெரேரா – குசல் மெண்டிஸ் ஆகியோர் பொறுப்பான முறையில் ஆடி இலங்கை அணியினை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வீரர்களின் ஆட்டத்தோடு இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை இறுதியில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 166 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் குசல் மெண்டிஸ் தன்னுடைய 15ஆவது T20I அரைச்சதத்தோடு 50 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் குசல் பெரேராவும் அரைச்சதம் தாண்டியதோடு 36 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்த போதும் அது பிரயோசனமாக அமைந்திருக்கவில்லை.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாக தொடர் நாயகன் விருதினை பெதும் நிஸ்ஸங்க வென்றார். இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான T20I தொடர் தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (20) கண்டி பல்லேகலயில் ஆரம்பமாகுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
166/1 (18)

West Indies
162/8 (20)

Batsmen R B 4s 6s SR
Brandon King b Nuwan Thushara 23 19 3 1 121.05
Evin Lewis b Nuwan Thushara 0 1 0 0 0.00
Shai Hope c Pathum Nissanka b Wanindu Hasaranga 18 25 2 0 72.00
Roston Chase c & b Kamindu Mendis 8 13 0 0 61.54
Sherfane Rutherford b Charith Asalanka 6 5 1 0 120.00
Rovman Powell c Bhanuka Rajapakse b Matheesha Pathirana 37 27 1 3 137.04
Gudakesh Motie st Kusal Mendis b Wanindu Hasaranga 32 15 1 3 213.33
Romario Shepherd b Nuwan Thushara 18 12 1 1 150.00
Fabian Allen not out 4 1 1 0 400.00
Alzarri Joseph not out 2 1 0 0 200.00


Extras 14 (b 4 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 162/8 (20 Overs, RR: 8.1)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 3 0 19 2 6.33
Nuwan Thushara 2 0 27 1 13.50
Dunith Wellalage 4 0 36 0 9.00
Wanindu Hasaranga 4 0 24 2 6.00
Kamindu Mendis 3 0 21 1 7.00
Charith Asalanka 2 0 14 1 7.00
Matheesha Pathirana 2 0 15 1 7.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Gudakesh Motie 39 22 7 1 177.27
Kusal Mendis not out 68 50 5 3 136.00
Kusal Perera not out 55 36 7 0 152.78


Extras 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 166/1 (18 Overs, RR: 9.22)
Bowling O M R W Econ
Fabian Allen 2 0 23 0 11.50
Alzarri Joseph 3 0 38 0 12.67
Gudakesh Motie 4 0 31 1 7.75
Shamar Joseph 2 0 26 0 13.00
Romario Shepherd 3 0 24 0 8.00
Roston Chase 4 0 24 0 6.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<