Home Tamil ஆறுதல் வெற்றியோடு இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்த மேற்கத்திய தீவுகள் 

ஆறுதல் வெற்றியோடு இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்த மேற்கத்திய தீவுகள் 

West tour of Sri Lanka 2024 

70

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில்  மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்திருக்கின்றது.  

எனினும் இலங்கை அணி ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.   

வளர்ந்து வரும் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை A அணி

முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி தொடர்ச்சியான மழையின் தாக்கம் காரணமாக அணிக்கு 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் இலங்கை வீரர்களினை துடுப்பாடப் பணித்தது. 

இலங்கை XI  

பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, டில்சான் மதுசங்க, மகீஷ் தீக்ஸன, அசித பெர்னாண்டோ 

துடுப்பாட ஆரம்பித்து மெதுவான ஆரம்பம் ஒன்றை பெற்ற இலங்கை வீரர்கள், பின்னர் குசல் மெண்டிஸின் அதிரடியோடு 23 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்கள் பெற்றனர் 

இலங்கைத் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் வெறும் 19 பந்துகளில் அரைச்சதம் பூர்த்தி செய்ததோடு 22 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 15ஆவது ஒருநாள் அரைச்சத்தோடு 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார் 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் மற்றும் ஷெர்பானே ரத்தர்போர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக டக்வத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்ட 195 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது ஈவின் லூயிஸின் அதிரடி சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களுடன் அடைந்தது 

டேவிட் வோர்னருக்கு எதிரான தடையை நீக்கிய அவுஸ்திரேலியா 

மேற்கிந்திய தீவுகள் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த ஈவின் லூயிஸ் தன்னுடைய 5ஆவது ஒருநாள் சதத்துடன் 61 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஷெர்பானே ரத்தர்போர்டும் அதிரடியினை வெளிக்காட்டி 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார் 

இலங்கைப் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக ஈவின் லூயிஸ் தெரிவாக தொடர் நாயகன் விருது சரித் அசலன்கவிற்கு வழங்கப்பட்டது 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
156/3 (23)

West Indies
196/2 (22)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka run out (Alzarri Joseph) 56 62 8 1 90.32
Avishka Fernando c & b Roston Chase 34 50 4 1 68.00
Kusal Mendis not out 56 22 9 1 254.55
Charith Asalanka c Keacy Carty b Sherfane Rutherford 6 3 0 1 200.00
Kamindu Mendis not out 0 1 0 0 0.00


Extras 4 (b 0 , lb 3 , nb 0, w 1, pen 0)
Total 156/3 (23 Overs, RR: 6.78)
Bowling O M R W Econ
Matthew Forde 5 0 12 0 2.40
Alzarri Joseph 5 0 41 0 8.20
Jayden Seales 4 0 32 0 8.00
Gudakesh Motie 5 0 21 0 4.20
Roston Chase 2 0 20 1 10.00
Sherfane Rutherford 2 0 27 1 13.50


Batsmen R B 4s 6s SR
Brandon King c Kusal Mendis b Asitha Fernando 16 19 2 0 84.21
Evin Lewis not out 102 62 9 4 164.52
Shai Hope c Avishka Fernando b Dilshan Madushanka 22 27 0 1 81.48
Sherfane Rutherford not out 50 26 4 3 192.31


Extras 6 (b 0 , lb 2 , nb 1, w 3, pen 0)
Total 196/2 (22 Overs, RR: 8.91)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 5 0 39 0 7.80
Dilshan Madushanka 5 0 50 1 10.00
Asitha Fernando 5 0 39 1 7.80
Wanindu Hasaranga 2 0 24 0 12.00
Janith Liyanage  1 0 9 0 9.00
Kamindu Mendis 2 0 14 0 7.00
Charith Asalanka 2 0 19 0 9.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<