சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுக்களால் (டக்வெத் லூயிஸ் முறையில்) வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
>> பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் மீண்டும் கைகோர்க்கும் முஸ்தாக் அஹ்மட்
முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவரான ஷாய் ஹோப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றார்.
இப்போட்டிக்கான இலங்கை அணி மூன்று சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதோடு அதில் முக்கிய உள்ளடக்கமாக இந்திய ஒருநாள் தொடரில் உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்க இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார். இப்போட்டியில் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான நிஷான் மதுஷ்க ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார்.
இலங்கை XI
நிஷான் மதுஷ்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வன்டர்செய், அசித பெர்னாண்டோ
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் அவ்வணியை ஷெர்பானே ரத்தர்போர்ட் – ரொஸ்டன் சேஸ் ஜோடி சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடிய நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது. மழை குறுக்கிட்ட சந்தர்ப்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 38.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
>> ஹொங் கொங் அணியை இலகுவாக வீத்திய இலங்கை A அணி!
நீண்ட நேரம் மழை நிலைமைகள் சீராகாத காரணத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் ஷெர்பானே ரத்தர்போர்ட் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் விளாசியதோடு 82 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் கீசி கார்டி 37 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற ஜெப்ரி வன்டர்செய் மற்றும் சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு டக்வெத் லூயிஸ் முறையில் 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வீரர்கள் தொடக்கத்தில் சிறு தடுமாற்றத்தினை காட்டியதோடு, ஒரு கட்டத்தில் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டனர்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தரப்பிற்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக காணப்பட்ட நிஷான் மதுஷ்க மற்றும் அணித்தலைவர் சரித் அசலன்க ஆகியோர் அதிரடி கலந்த இணைப்பாட்டம் ஒன்றிணை உருவாக்கினர்.
பின்னர் இரண்டு வீரர்களது இணைப்பாட்ட உதவியோடு இலங்கை அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 31.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களுடன் அடைந்தது.
இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் சரித் அசலன்க தன்னுடைய 12ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் தன்னுடைய கன்னி ஒருநாள் போட்டியில், கன்னி அரைச்சதம் விளாசிய நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் சுழல்வீரரான குட்டாகேஷ் மோட்டி 3 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜொசேப் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்த போதும் அதனால் பிரயோசனம் கிடைத்திருக்கவில்லை.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் தலைவரான சரித் அசலன்க தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி புதன்கிழமை (23) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alick Athanaze | st Kusal Mendis b Wanindu Hasaranga | 10 | 20 | 0 | 0 | 50.00 |
Brandon King | b Wanindu Hasaranga | 14 | 24 | 2 | 0 | 58.33 |
Keacy Carty | c Dunith Wellalage b Charith Asalanka | 37 | 58 | 1 | 1 | 63.79 |
Shai Hope | lbw b Jeffery Vandersay | 5 | 13 | 0 | 0 | 38.46 |
Sherfane Rutherford | not out | 74 | 82 | 5 | 3 | 90.24 |
Roston Chase | not out | 33 | 33 | 4 | 0 | 100.00 |
Extras | 12 (b 0 , lb 9 , nb 0, w 3, pen 0) |
Total | 185/4 (38.3 Overs, RR: 4.81) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 4 | 0 | 28 | 0 | 7.00 | |
Janith Liyanage | 3 | 0 | 9 | 0 | 3.00 | |
Dunith Wellalage | 7 | 0 | 20 | 0 | 2.86 | |
Wanindu Hasaranga | 6 | 0 | 18 | 2 | 3.00 | |
Jeffery Vandersay | 8.3 | 0 | 45 | 1 | 5.42 | |
Charith Asalanka | 10 | 0 | 56 | 1 | 5.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Brandon King b Gudakesh Motie | 69 | 54 | 7 | 1 | 127.78 |
Avishka Fernando | c Roston Chase b Alzarri Joseph | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Kusal Mendis | c Shai Hope b Alzarri Joseph | 13 | 8 | 3 | 0 | 162.50 |
Sadeera Samarawickrama | b Gudakesh Motie | 18 | 12 | 3 | 0 | 150.00 |
Charith Asalanka | lbw b Gudakesh Motie | 77 | 71 | 8 | 3 | 108.45 |
Janith Liyanage | not out | 18 | 18 | 1 | 1 | 100.00 |
Kamindu Mendis | not out | 30 | 21 | 3 | 1 | 142.86 |
Extras | 4 (b 0 , lb 2 , nb 0, w 2, pen 0) |
Total | 234/5 (31.5 Overs, RR: 7.35) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jayden Seales | 4.5 | 0 | 43 | 0 | 9.56 | |
Alzarri Joseph | 6 | 0 | 39 | 2 | 6.50 | |
Gudakesh Motie | 8 | 0 | 47 | 3 | 5.88 | |
Roston Chase | 6 | 0 | 42 | 0 | 7.00 | |
Hayden Walsh | 4 | 0 | 37 | 0 | 9.25 | |
Romario Shepherd | 3 | 0 | 24 | 0 | 8.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<