மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
குறிப்பிட்ட இந்த தொடரானது அடுத்த மாதம் 15ம் திகதி ஒருநாள் தொடருடன் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
T20I தரவரிசையில் முதலிடம் பிடித்த வனிந்து ஹஸரங்க!
ஒருநாள் போட்டிகள் 15, 18 மற்றும் 21ம் திகதிகளில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், T20I போட்டிகள் 24, 26 மற்றும் 28ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 15 (காலி)
- இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 18 (காலி)
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 21 (காலி)
- முதல் T20I போட்டி – ஜூன் 24 (ஹம்பாந்தோட்டை)
- இரண்டாவது T20I போட்டி – ஜூன் 26 (ஹம்பாந்தோட்டை)
- மூன்றாவது T20I போட்டி – ஜூன் 28 (ஹம்பாந்தோட்டை)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<