இலங்கை – மே.தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!

West Indies Women’s Tour of Sri Lanka 2024

63
West Indies Women’s Tour of Sri Lanka 2024

இலங்கை மகளிர் அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு வகை தொடர்களில் விளையாடவுள்ள மேற்கிற்தியத் தீவுகள் மகளிர் அணி நேற்று முன்தினம் (04) இலங்கையை வந்தடைந்தது.

>>இலங்கை வரும் மே.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி!<<

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச T20i கிரிக்கெட் தொடர் ஜூன் 24, 26, 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

எனவே, இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டி அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 15 – ஹம்பாந்தோட்டை

2வது ஒருநாள் போட்டி – ஜூன் 18 – ஹம்பாந்தோட்டை

3வது ஒருநாள் போட்டி – ஜூன் 21 – ஹம்பாந்தோட்டை

முதல் T20i போட்டி – ஜூன் 24 – ஹம்பாந்தோட்டை

2வது T20i போட்டி – ஜூன் 26 – ஹம்பாந்தோட்டை

3வது T20i போட்டி – ஜூன் 28 – ஹம்பாந்தோட்டை

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<